ShareChat
click to see wallet page
search
வாழ்வில் வெற்றியாளன் ஆவதற்கான சுய பரிசோதனை... நிகழ்கால வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தன்னை பரிசோதித்துக் கொள்வது மருத்துவத்தில் மட்டுமல்ல மனதிலும் தான். மனதில் வரும் பிரச்சினைகள் தான் உடலுக்கும் ஊறு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடுகின்றது. எண்ணம் சொல் செயல் எங்கே தூய்மையாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்கின்றதோ அங்கே மனமானது ஆரோக்கியமாக இருக்கின்றது என்பது அர்த்தமாகின்றது. குழந்தைகளை வளர்த்தும் வீட்டில் பெற்றோர்களின் எண்ணம் கூட தூய்மையற்றதாக இருந்தால் அதன் வாயு மண்டலம் குழந்தைகளை மட்டுமல்ல அங்கே இருக்கும் பெரியவர்களையும் சேர்த்து பாதிக்கும். எண்ணம் அப்படிப்பட்டது அதன் சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் அதன் ஒளி அலைகளை பரப்ப கூடியது.நாம் ஒவ்வொருவரும் பரிசோதிக்க வேண்டும் நமது எண்ணம் சொல் செயலில் கவனம் கொடுக்க வேண்டும். நாம் குழந்தைகளை கண்டிக்கின்றோம் ஆனால் நமது எண்ணங்களை யார் பார்க்கின்றார்கள் என்று நினைத்து விடுகின்றோம் ஆனால் நமது எண்ணங்களானது நமது வாழ்வில் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியதாக உள்ளது. எனவே தவறான செயல்களை அறவே நீக்க ஒருவர் முற்படவேண்டும் அது எண்ணத்தில் கூட லீக்கேஜ் ஆக கூடாது. நீங்கள் உற்பத்தி செய்யும் எண்ணமானது உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளும் கவசமாகும். அதுவே உங்களை அழிவிற்கு கொண்டு செல்லும் ஆயுதமும் ஆகும்.எனவே எண்ணம் என்பது அனைத்திற்கும் விதையாக மாறி விடுகின்றது. அதற்கடுத்தார் போல சொல். இந்த சொல்லானது எங்கே விளைவுகளை ஏற்படுத்துமோ அங்கே ஆபத்தும் விளையும் நன்மையும் விளையும். எனவே, சொல்லற சும்மா இரு என்று பெரியவர்கள் சொன்னார்கள். சொல்லற சும்மா இரு என்றால் அவசியமானதைப் பேசி தேவையற்றதை நீக்குவதை தான் இப்படி சொல்லி வைத்தார்கள். சொல்லானது கூர்மையான கத்தியை போன்றது அதில் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எனவே பேசுவதற்கு முன்பாக ஒவ்வொரு வார்த்தையும் கவனித்துப் பேச வேண்டும் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும். சொல்லில் இனிமை இல்லாத வரை நா நயமற்றவர் என்றும் அழைக்கலாம். இதை குறளும் கனி இருக்கும் போது காயை உண்டதை போல என குறிப்பிடுகின்றது. வார்த்தைகள் வாழ்க்கையை உருவாக்குபவை. வார்த்தைகள் வாழ்க்கையை அழித்துவிடவும் செய்யும். கவனமாக பேச வேண்டும்.சொல் என்பது வெளிப்படுவதை பொறுத்து அது நரகத்தின் வாயிலாகவும் சொர்க்கத்தின் வாயிலாகவும் ஆகின்றது. சொல்லானது ஒருவரின் வாழ்க்கையில் விளக்கேற்றினால் அவர் கடவுள். அதே சொல் ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தால் அதை சொன்னவர் மகான். சொல்லானது ஒருவருக்கு உற்சாகத்தை அளித்தால் அவர் ஊக்குவிப்பவர். தன்னம்பிக்கை அளித்தால் அவர் உதாரண புருஷன். இப்படி ஒரு சொல்லானது நமது வாழ்வில் பல மந்திர வித்தைகளை செய்யக்கூடியது. அடுத்து செயல் எண்ணமும் சொல்லும் மிகச் சரியாக இருந்தால் அங்கே செயல். என்பது தானாகவே சரித்திரமாக மாறிவிடுகின்றது. செயல் வீரன் என்று யாரை சொல்வார்கள் என்றால் எந்த காரியம் அசாத்தியமானதோ அதை சாத்தியமாக்கி காட்டுபவரே செயல்வீரன். எனவே நம்மால் முடியாது என்று ஒதுங்காமல் நமது எண்ணம் சொல் செயல் இவற்றை பண்படுத்தப்பட்ட நிலம் போல உருவாக்க வேண்டும். எண்ணத்தில் கவனம் வைப்பவன் விவேகம் உடையவன். சொல்லில் கவனம் வைப்பவன் சொல்லின் செல்வன். கர்மத்தில் கவனம் வைப்பவன் கர்மவீரன். ஒருவேளை இவற்றில் எல்லாம் கவனம் வைப்பதற்கு எனக்கு சரியாக வரவில்லை என்றால் ஒரு செயலை செய்யும் முன் ஒரு பேப்பரை எடுத்து எழுதுங்கள் இந்த செயலை இந்த நேரம் செய்வதால் எனக்கு என்ன விளைவு ஏற்படும்? இந்த வார்த்தையை இந்த நேரம் பேசுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் அதில் நன்மை என்ன? தீமை என்ன? இதை உட்கார்ந்து எழுதினால் நிறைய குறிப்புகள் வெளிப்படும். அதே போல தான் செயலுக்கும் நமது செயலானது யாரையும் துக்கப்படுத்தி விடக் கூடாது. ஒரு நல்ல மனிதன் யாரையும் துக்கப்படுத்தமாட்டான். பிறர் தரும் துக்கத்தை வாங்கிக் கொள்ளவும் மாட்டான். எங்கே துக்கம் உள்ளே அனுமதிக்கப்படுகின்றதோ அங்கே மனம் சொல் செயல் அனைத்தும் தனது பலத்தை இழந்து பலவீனமாக ஆகிவிட ஆரம்பிக்கின்றது. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனை அறிவு பூர்வமான வார்த்தைகள் அற்புதமான செயல்களாக மாறி விடுகின்றன. எனவே ஒரு செயலை செய்யும் முன் சுய பரிசோதனை செய்யுங்கள்.இன்று என்னுடைய எண்ணம் சொல் செயல் இவற்றை பரிசோதித்து இதனால் லாபமா நஷ்டமா என்று ஒரு பேப்பரில் எழுதி விடை கண்டு விட்டு பிறகு தொடங்குங்கள். வரும் நாட்களில் ஒரு மகத்தான வாழ்க்கைக்கு நீங்கள் மாபெரும் விடை காண்பீர்கள். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:25