ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் காலை ஜெபம்* "ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! ‘கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்". (திருப்பாடல் 3 : 1-7) அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த அதிகாலை வேளையில் உம்மை போற்றுகின்றேன், புகழ்கின்றேன், நன்றி கூறுகின்றேன். இறைவா, என் அன்னையின் வயிற்றில் நான் கருவாக இருந்த காலம் முதல், இந்நாள்வரை எனக்காக நீர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி. உமது மேலான ஆசீர்வாதங்களுக்காக நன்றி அப்பா. இறைவா! அன்று நீதித் தலைவர்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள் முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள். இவை அனைத்தும் இறைவா, அவர்கள் உம் மீது கொண்ட, அசைக்க முடியாத நம்பிக்கையினாலேயே செய்ய முடிந்தது. ஆனால் அப்பா! நான் என் நம்பிக்கையின்மையின் நிமித்தம், எதிர்மறை எண்ணங்களால் சவால்களை எதிர்கொள்ள இயலாமல், வாழ்வில் பின்வாங்கிய தருணங்களுக்காக உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மனமிரங்கி மன்னித்தருளும். தந்தையே! என் நம்பிக்கையை வளரச்செய்து, எனது நேர்மறை எண்ணங்களால் எனது வலுவின்மையை வலிமை மிக்கதாக மாற்றியருளும். இறைவா, நீர் அருளின இப்புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நிறைவாய் ஆசீர்வதித்து வழிநடத்தும். இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில்... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்... (1) *ஆமென்.*
✝️இயேசுவே ஜீவன் - RI पनननवर ~]L +e 0 ಲೆ೯ೆ ப555 BRF RI पनननवर ~]L +e 0 ಲೆ೯ೆ ப555 BRF - ShareChat