ShareChat
click to see wallet page
search
🌹ஓம் நமோ வேங்கடேசாய 🌹குவலயம் காக்கும் கோவிந்த நாமம் வைணவத் தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு "கோவிந்தா' என்று முழக்கமிடுவ தைக் கேட்கிறோம். கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றது. அப்படி என்ன இந்த நாமத்தின் பெருமை? தெரிந்து கொள்வோம். 🌹புராண சம்பவம்: மகாலட்சுமி தன்னை விட்டுப் பிரிந்ததில் விரக்தி ஏற்பட்டு வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீமந்நாராயணன், ஸ்ரீநிவாஸ ன் என்ற திருநாமத்துடன் திருமலை பகு தியில் வாசம் செய்கிறார். அருகிலேயே அகத்திய முனிவரின் ஆசிர மமும் அமைந்திருந்தது. அங்கு ஒரு பெரி ய கோசாலை பராமரிக்கப்பட்டு வந்தது. தனக்கு ஒரு பசுவினை தானம் தருமாறு முனிவரிடம் ஸ்ரீநிவாஸன் கேட்டார். வந்திருப்பது திருமால் என்று அறிந்தபோ திலும், "ஒரு பிரம்மச்சாரிக்கு பசுவினை தானம் செய்யக் கூடாது' என்று முனிவர் மறுத்து விட்டார். பின்னர், பத்மாவதித் தாயாரை மணம் புரி ந்த பிறகு, முனிவரிடம் பசுவைத் தானமாக ப் பெற தாயாருடன் அகத்தியர் ஆசிரமத்தி ற்குச் சென்றார் பெருமாள். அச்சமயம் முனிவர் அங்கு இல்லாததால் சீடர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. விடைபெ ற்று பெருமாளும் சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அங்கு வந்த அகத்தியர் நடந்ததைக் கேள்விப்பட்டு உலகைக் காக் கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்கழித்து விட்டதற்கு வருந்தி, காம தேனுவைப் போன்ற பசுவுடன், பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக் கொண்டு புறப்பட்டார். சிறிது தொலைவில் பெருமாளைப் பார்த்து விட்டார். "சுவாமி, கோவு இந்தா' என்று திரும்பத் திரும்ப குரல் கொடுத்தார். தெலுங்கில் "கோவு' என்றால் பசு. "இந்தா' என்ற சொல்லுக்கு எடுத்துக்கொள் என்று பொருள். ஆனால் பெருமாள் திரும்பிப் பார்க்காமல் தாயாருடன் விரைவாக நடந்தாராம். அகத்தியரும் விடாமல் பின் தொடர்ந்தார். அவர் "கோவு', "இந்தா' என்றவார்த்தையை அடிக்கடி கூறியபடியால், அது "கோவிந்தா' என்ற சப்தமாக மாறியது. சோதனையை நீடிக்க விரும்பாமல், அகத் தியரை ஆசுவாசப்படுத்தி பசுவை தானமா கப் பெற்றுக் கொண்டார் பெருமாள். மேலு ம் அகத்தியரிடம் கலியுகத்தில் தன்னை அழைக்க உகந்த நாமம் "கோவிந்தா' என் றும், அந்த நாமத்தைச் சொல்பவர்களுக்கு தன் அனுக்கிரகம் உடனே கிடைக்கும் என்றருளி அங்கிருந்து விடை பெற்றார். 🌹மற்றொன்று: கோகுலத்தில் கிருஷ்ணர் பசுக்களைப் பராமரித்து வந்தார். "கோ' என்றால் "பசு' என்பதைக் குறிக்கும். "விந்தன்' என்றால் "காப்பவன்' என்று பொருள். அவ்வகையி ல் "கோவிந்தன்' என்ற திருநாமம் உருவா னது. கிருஷ்ணாவதாரத்தில் பகவானுக்கு "கோவிந்த பட்டாபிஷேகம்' நடைபெற்றதா க பாகவதம் கூறுகிறது. திருமலையில் சுப்ரபாத சேவையில் கூறப் படும் "உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத் திஷ்ட' என்ற வரிகள் காதில் ஒலிக்கும். இதன் பொருள்: "கோவிந்தா! நீ விழித்தால் குவலய மே விழிக்கும்! கோவிந்தா! தூக்கத்திலிருந்து திருக்கண் மலர்ந்து அருள்புரிவாய்' என்பதே! "அநாதையாக இறப்பவர்களுக்கும் ஆண்டவ ன் துணையாக உள்ளான்' என்பதை உணர்த்து வதற்காக அந்த உடலுக்கு செய்யும் தகன காரியங்களுக்கு "கோவிந்தா கொள்ளி போடுதல்' என்று கூறுவர். காஞ்சி மஹா பெரியவர் தன்னுடைய அருளாசி உரைகளில் "அநாதை பிரேத சம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்' என்று குறிப்பிடுவது வழக்கம்.. 🌹ஓம் நமோ வேங்கடேசாய... 🌹07.01.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏கிருஷ்ணா #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
🔍ஜோதிட உலகம் 🌍 - Gowobom" என்று வணங்கி பதிவிடு உனக்கு இனி ஒவ்வொன்றாக நல்லது நடக்க ஐயராகவன் தொடங்கும் நீபட்டதுன்பங்கள் விட்பது; விஜயராகவன் அனைத்தும் முடிந்து Gowobom" என்று வணங்கி பதிவிடு உனக்கு இனி ஒவ்வொன்றாக நல்லது நடக்க ஐயராகவன் தொடங்கும் நீபட்டதுன்பங்கள் விட்பது; விஜயராகவன் அனைத்தும் முடிந்து - ShareChat