*மார்கழி ஸ்பெஷல்*
🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿
*ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி ஆண்டாள் திருக்கோவில் சிறப்புகள்*🌹
❤💓💛💙🔶🔷♥️❤💓💛💙🔶🔷♥️❤❤💓💛💙🔶🔷♥️❤💓💛💙🔶❤
மாதவிப்பந்தல்
ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது. இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம்.
கோதா சரணம் ப்ரபத்யே......!!!
ஸ்ரீ விஷ்ணு சித்த
குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி
சந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம்
கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய சரண :
சரணம் ப்ரபத்யே ||
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.
என்று ஆண்டாளை வாழ்த்தி வணங்க செய்கிறது. ஆன்மாக்கள் எல்லாம் உய்யும்படி எளிய முறையான சரணாகதி தத்துவத்தை காட்டிய கோதை பிராட்டியின் திருவடிகளைப் போற்றுவோம்.
ஸ்ரீ ஆண்டாள் அரங்கன் திவ்ய திருவடிகளே சரணம்🙏🙏🙏 #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏼சிவன் - பார்வதி #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻


