இரண்டு நாட்களுக்கு மழை வெளுக்கும்
இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், "சென்னையில் அற்புதமான பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும்.
இன்று இரவு முதல் நாளை வரை பலத்த மழை பெய்யக் கூடும். ஜனவரி 24ஆம் தேதியான இன்று சென்னையில் முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மிதமான மழை பெய்யக் கூடும். ஜனவரி 25ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை பரவலாக மழை பெய்யக் கூடும். ஜனவரி 26ம்ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக் கூடும்.
எங்கெங்கு தெரியுமா?
கடலோர மாவட்டங்கள் மட்டுமல்ல, உள் மற்றும் தெற்கு மாவட்டங்களும் கூட மழை பெய்யும். டெல்டாவில் இருந்து வட தமிழகம் முழுவதும் மழை பெய்யக் கூடும். குறிப்பாக, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கடலூர், பாண்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் நல்ல மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 12.3 மி.மீ மழை பெய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, டெல்டா வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், "ஈரப்பதமான கீழ் திசை காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் மழை வானிலை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் விட்டு விட்டு மிதமான மழை பதிவாகும். வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பதிவாகும். ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை வானிலையை கருத்தில் கொண்டு தமிழக விவசாயிகள் அறுவடை பணிகளை ஜனவ 27ம் தேதி வரை ஒத்திவைப்பது நல்லது" என தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜனவரி 24ஆம் தேதியான இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗


