ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY *"இன்றைய சிந்தனை"*.( 16.01.2026 ) ............................... *"உழவர் திருநாளாம் மாட்டுப் பொங்கல்’’..* .................................. உழவர் தினம் (மாட்டுப் பொங்கல்) என்பது தைப்பொங்கலின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். மாட்டுப் பொங்கலின் அன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால் நடைகளை குளிப்பாட்டுவர். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு , உழவுக் கருவிகளை சுத்தம் செய்து வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந் நாளாகும். 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். தற்காலத்தில் விவசாய உற்பத்தில் பலவிதமான இயந்திரங்கள் வந்துள்ள காரணத்தால் மாடுகளின் தேவை குறைந்துள்ள போதிலும் நம் மூதாதையினர் செய்து வந்த மாட்டுப் பொங்கல் விழா கிராம புறங்களில் மட்டுமே தற்போது கொண்டாடப் பெற்று வருகின்றது. *ஆம்.,நண்பர்களே..* மாடுகள் சேத்தில் கால் வைத்து உழவு செய்தால்தான், நாம் சோற்றில் கூட கை வைக்க முடியும். எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பாராமல் நம்மை ஒவ்வொரு நாளும் வாழ வைத்து வரும் உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு இந்நாளில் நன்றி கூறுவோம்............🌹🌹🌹🙏🏻💐💐💐💐💐💐
innraya SINTHANAY - உணவுக்காக உழைக்கும் 06 . நம் உழவ பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறுவோம் 11 உணவுக்காக உழைக்கும் 06 . நம் உழவ பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறுவோம் 11 - ShareChat