சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வு தங்க நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் கடுமையாக அதிகரித்து புதிய விலை உச்சங்களை தொட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டு, கடந்த மாதம் சவரன் ஒரு லட்சத்தைக் கடந்தது.
கடந்த சனிக்கிழமை (ஜனவரி 10) அன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 12,900-க்கும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,03,200 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1,04,960 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580 #📢ஜனவரி 12 முக்கிய தகவல் 😃 ## புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை 😱


