ShareChat
click to see wallet page
search
*சிறுவர் சிறுகதை* *கல்வி* 👧கலாவும், 🧕கமலாவும் சிறுவயதிலிருந்தே தோழிகள். 👧கலா பத்தாவது வரையில் படித்திருக்கின்றாள், 🧕கமலா 👩‍🎓 முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாள். 🧕கமலாவுக்கு வெளியூரில் 🏫அரசாங்கப் பள்ளியில் 👩‍🏫ஆசிரியர் பணி கிடைத்தது.👧கலா தையல் பயிற்சி பெற்று தையல் கடைக்கு வேலைக்குச் செல்கிறாள். 🧕கமலாவின் சம்பளம் மாதம் 30,000. 👧கலாவின் சம்பளம் மாதம் 15000, வீட்டு வாடகை அத்தியாவசிய தேவைகள் போக மீதமுள்ள 3000 ரூபாயை சேமிப்பாள்.அதை வங்கியில் சேமிக்க தெரியாது 🧕கமலாவின் உதவியோடு மாதம் 3000 வங்கியில் செலுத்தி சேமித்தாள். 🧕 கமலா  அத்தியாவசிய தேவை போக 13000 ரூபாயை வங்கியில் சேமிப்பாள். 👧கலாவால் வருடத்திற்கு 36000 மட்டுமே சேமிக்க முடிந்தது. 🧕கமலாவால் வருடத்திற்கு 1,56000 சேமிக்க முடிந்தது. 10 வருடம் கழித்து  தனது சேமிப்பைக் கொண்டு 🧕கமலா சொந்த 🏠வீடு கட்டினாள் , 👧கலா தனது சேமிப்பைக் கொண்டு சிறிய தையல் கடை ஆரம்பித்தாள். 👧கலாவுக்கு சொந்த வீடு கனவாகவே இருந்தது. 👧கலா 20 வருடம் கழித்து தொழில் வருமானம் உயர்ந்து, 15 தையல் கடை சொந்த ஊரில் நிறுவி கமலாவிடம் இணைய தளத்தைப் பற்றி கேட்டறிந்து துணிகளை உலகெங்கும் விற்க இணையதளத்தை உருவாக்கினாள். உலகெங்கும் உள்ள மக்கள் துணிகளை முன்பதிவு செய்து இணைய வழியிலேயே பணம் செலுத்தினர், 👧கலா தபால் மூலம் துணிகளை முன்பதிவு செய்தவர் முகவரிக்கு அனுப்ப  இவ்வாறு கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதி பணத்தை சேமித்து வைத்து 🏡வீடு கட்டினாள்.  *நீதி:* *"கல்லாதவர் கண்ணில்லாதவர்"* என்றனர் நம் முன்னோர். அதாவது நமக்கு படிக்கத் தெரியவில்லை என்றால் கண் கொண்டு சொற்களைப் பார்த்துப் பயனில்லை ஏனென்றால் சொற்களின் கருத்தை பெற்று பின்பற்ற முடியாது. பேருந்தில் பயணம் செய்ய பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் சொற்களைப் படித்து தான் பேருந்து எங்கே செல்கிறது என்பதை யார் உதவியும் இல்லாமல் எளிதில் நாமாக அறிய முடியும். படிக்கத் தெரியவில்லை என்றால் பிறரிடமோ, இல்லை நடத்துனரிடமோ கேட்டறிய வேண்டும். இக்கதையில்  இருவராலும் வீடு கட்ட முடிந்தது. கமலா உயர் கல்வி பெற்றதால், மதிப்புமிக்க ஆசிரியர் பணி வெளியூரில் கிடைத்தது.  *"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு*" என்பதிற்கேற்ப கமலாவுக்கு வெளியூரிலும் வருமானத்துடன் மதிப்பு கிடைத்தது. கமலாவால் 10 வருடத்திலேயே சொந்த வீடு கட்ட முடிந்தது, கலா சொந்த வீடு கட்ட 20 வருடங்கள் காலதாமதமானது. By Covai women ICT_போதிமரம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
உற்சாக பானம் - ShareChat