ShareChat
click to see wallet page
search
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய நலன்கள்! யா அல்லாஹ்! கோரிக்கைகளில் சிறந்ததை!, துஆக்களில் சிறந்ததை! உயர்ந்த வெற்றியை! நேர்த்தியான அமலை! மேலான நற் கூலியை! நல்வாழ்வை, நல்மரணத்தை உன்னிடம் வேண்டுகிறேன்! என்னை உறுதியோடு நிற்கச் செய்வாயாக! எனது நன்மையின் தட்டையைக் கனமாக்குவாயாக! எனது ஈமானை வலுவாக்குவாயாக! எனது பதவியை உயர்த்துவாயாக! எனது தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என் பிழையைப் பொறுத்தருள்வாயாக! உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! நான் உன்னிடம் நல்லதொடக்கத்தையும், அதனுடைய நல்ல முடிவுகளையும், அவற்றை ஒன்று திரட்டி தருபவைகளையும் அவற்றில் ஆரம்பமானதையும், அவற்றின் இறுதியையும், புறத்துள்ளவற்றையும், அகத்தில் உள்ளவற்றையும் கேட்கிறேன்! உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! உறுப்புகளால் புரியும் காரியங்களின் நலன்களையும்! இதயத்தால் எண்ணும் செயல்களின் நலன்களையும்! நான் செய்யும் மற்ற அமல்களின் நலன்களையும்! என் செயல்களின் நலன்களையும்! அகத்திலுள்ளவற்றின் நலன்களையும்! புறத்திலுள்ளவற்றின் நலன்களையும்! சுவனத்தின் உயர்பதவிகளையும் கேட்கிறேன்! யா அல்லாஹ்! உன்னிடம் என் பெயரை உயர்த்தும் படியும், என் பாவச்சுமைகளை என் முதுகிலிருந்து இறக்கிவிடுவதையும், என் விவகாரங்களை சீர்படுத்துவதையும், என் இதயத்தைத் தூய்மையாக்குவதையும், என் கற்பொழுக்கத்தை பாதுகாப்பதையும், என் கப்ரை ஒளியாக்குவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்! மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! நான் உன்னிடம் என் செவி, என் பார்வை, என் உயிர், என் உடல், என் குணம், என் குடும்பம், என் செல்வம், என் வாழ்வு, என் மரணம், என் செயல் இவையனைத்திலும் நீ பரக்கத் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்! மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்.(ஹாகிம்) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹபிஹி அஜ்மயீன். வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஆமீன். #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - அலலாஹ Wm மகிழ்ச்சியாானவாழ்கிகை இன்பமானவாழ்கிகை நோமறிறவாழ்கிகை பரகிகதிநிறைந்தவாழ்கிகை வாழ்கிகை கடன்இல்லாத நிம்மதியானவாழ்கிகை அமைதியானவாழ்கிகை 9  வங்களுகிகுதி தந்தருவ்வாூாக ரஹமானே (I Tyisha] அலலாஹ Wm மகிழ்ச்சியாானவாழ்கிகை இன்பமானவாழ்கிகை நோமறிறவாழ்கிகை பரகிகதிநிறைந்தவாழ்கிகை வாழ்கிகை கடன்இல்லாத நிம்மதியானவாழ்கிகை அமைதியானவாழ்கிகை 9  வங்களுகிகுதி தந்தருவ்வாூாக ரஹமானே (I Tyisha] - ShareChat