ShareChat
click to see wallet page
search
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *29.01.2026 (வியாழன்)* *⚜️ஒளி நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், *"தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது?."* என தாவீது கூறுகிறார். தூசிக்குச் சமமான நம்மை ஆண்டவர் கண்ணின் மணி போல் காத்து வருகிறார். காக்கும் நம் தேவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், *"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதிலும், வாரி வழங்குதலிலும் நாம் தாராள மனப்பான்மையோடு இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹மூன்றாவது. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,* ஆதிகால திருச்சபையில் ஆயராக இருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக மறைபரப்பு பணியை திறம்பட செய்த இன்றைய புனிதர் வலேரியஸிடமிருந்து நாம் விடா முயற்சியைக் கற்றுக் கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹நான்காவது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,* நாம் மனம் மாறவேண்டும் என்றும், நாம் மனம்மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் அனைவரும் மனம்மாறி இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹ஐந்தாவது. ஆண்டவர் இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,* குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ஜனவரி  IS TA 29 நீங்கள் கேட்பதைக் குறித்துக் இயேசு, கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும்  டுதலாகவும் கொடுக்கப்படும் கூ மாற்கு 4:24 சாமுவேல் 7: 18-19, 24-29 திருப்பாடல் 132: 1-3-5, 11-14 4: 21-25 மாற்கு இறைவார்த்தை வாழ்வு தரும் ஜனவரி  IS TA 29 நீங்கள் கேட்பதைக் குறித்துக் இயேசு, கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும்  டுதலாகவும் கொடுக்கப்படும் கூ மாற்கு 4:24 சாமுவேல் 7: 18-19, 24-29 திருப்பாடல் 132: 1-3-5, 11-14 4: 21-25 மாற்கு இறைவார்த்தை வாழ்வு தரும் - ShareChat