மகளிர் உரிமை திட்டத்தில் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்தவகையில் அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது.
அதன்படி 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிதாக விண்ணப்பத்தவர்களில் சுமார் 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 12ஆம் தேதி) மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றால் தகுதியான நபர்கள் அப்பகுதி கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இது தொடர்பாக அமைச்சர் சக்ரபாணி கூறிய போது, 29 லட்சம் மகளிர் உரிமைத் தொகை காண விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்தால் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார் #📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 #மகளிர் உரிமை தொகை ரூ.1000 #முன் கூட்டியே மகளிர் உரிமை தொகை.


