ShareChat
click to see wallet page
search
சொல்லப்படாத காதல் கதை - பகுதி 2.... ருக்மணி கிருஷ்ணன் காதல் கதை.... அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் அங்கே மலர்ந்தது காதல், என ராமனும் சீதையுமாக காதலித்தவர்கள், ஒருமுறை கூட பார்க்காமல் ருக்மணி கிருஷ்ணனாக காதலித்தனர். இப்போதெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கிற பையன் கதாநாயகன் மாறி இருக்கனும், உடற்கட்டா இருக்கனும் என்று பெண்களும், நான் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு அட்லீஸ்ட் சீரியல் நடிகை மாறி ஆச்சும் இருக்கணும், எங்கம்மாவ அவ அம்மா மாறி பாத்துக்கனும், என ஆண்களும் பல எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ருக்மணியோ கிருஷ்ணனின் பெயரை கேட்டதும் காதல் கொண்டாள். ருக்மணியோட அண்ணன் ருக்மன். அவன் நண்பன் ஜராசந்தன். அவனோட மகளை கட்டுனவன் தான் கம்சன். கம்சனை கொன்று தன் மகளை விதவையாக்கிய கண்ணனை பழி வாங்க ருக்மனின் உதவியை நாடி ஜராசந்தன் வருகிறான். அங்க நடந்ததைப் பற்றியும் கண்ணனைப் பற்றியும் அவன் சொல்லச் சொல்ல, ருக்மணி மனதில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. கமசனையே கொன்ற வீரனா? அவனை பார்த்தே ஆகனுமே என தன் தோழியை மதுராவிற்கு அனுப்புகிறாள் ருக்மணி. ஆனால், அவள் தோழி வந்த நேரம் கண்ணன் குருகுலம் போக ஏற்பாடு ஆகியிருந்தது. கண்ணனுக்கு மொட்டையடிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பதறிப் போன ருக்மணியின் தோழி கண்ணனுடைய அறைக்குள் போய் பதுங்கி கொள்கிறாள். அப்போது அங்கு ஒரு கறுப்பு நிற சிறுவன் மஞ்சள் நிற பட்டு பீதாம்பரத்தை இடையில் கட்டியும், மயில்பீலி கொண்ட மாணிக்க மகுடம் தலையில் அணிந்தும், கையில் மாற்று உடையோடும் வருகிறான். அவனது அழகில் தோழி மயங்கி நின்றாள். அவன் தான் கிருஷ்ணன் என்பதை சேவகர்கள் அவனுக்கு மரியாதை தருவதை வைத்து அறிந்து கொண்டாள். அடுத்து என்ன நேரே அவனிடம் போய் பேச வேண்டும். அந்த நேரம் பார்த்து அவன் அண்ணனான பலராமன் உள்ளே வருகிறான். இவ்வளவு நேரம் காத்திருந்தும் அவன் முகத்தை கூட சரியாக பார்க்க முடியாத மாறி ஆயிருச்சே என புலம்பியபடி அறையை விட்டு வெளியே நிற்கிறாள். நாம் கிருஷ்ணனை பார்த்தோம் என ருக்மணியிடம் எப்படி நிரூபிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறாள். அதற்குள் கிருஷ்ணனும் பலராமனும் மொட்டையடித்து, காவி தரித்து, நாமமிட்டு பிரம்மச்சரியம் ஏற்று குருகுலம் போக ஆயத்தமாகி விட்டனர்.. இப்போது நாம் இங்கிருந்தால் யாராவது நம்மை பார்த்து விடுவார்கள். இனி நாம் கிளம்ப வேண்டியது தான். வேகமாக கண்ணன் அறையில் மீண்டும் நுழைந்து, கண்ணனின் மயிலிரகை திருடிக்கொண்டு விதர்ப நாடு வந்தடைந்தாள். அவள் சொன்ன அடையாளங்களை வைத்து கிருஷ்ணனின் முகமற்ற ஓவியத்தை வரைந்தாள் ருக்மணி. தோழி தந்த மயிலிறகை ஓவியத்தின் தலையில் சூடி அதையே கண்ணனாக எண்ணி காதல் கொண்டாள். அவனைப் பார்க்கவில்லை, பேசவில்லை, இவ்வளவு ஏன் ருக்மணினு ஒருத்தி இருக்கானு கூட கண்ணனுக்கு தெரியாது. ஆனால் கண்ணனை பல வருடமாக உருகி உருகி ருக்மணி காதலித்தாள். அவள் கண்ணனிடம் தன் காதலை சொல்லவே இல்லை. ஆனால் அவள் காதலை வெளிப்படுத்தும் ஒரு தருணம் வந்தது. அவளுக்கு பிடிக்காத ஒரு முரடனோடு திருமணம் நிச்சயமானது. அதனால் வேறு வழி என்று கண்ணனிடம் தனது காதலை கூற ஆயத்தமானாள். தன் மனதில் பட்டதை எல்லாம் ஒரு மடலில் எழுதி, அதை தன் சேவகனிடம் கொடுத்து கிருஷ்ணனிடம் கொண்டு சேர்க்க அனுப்பினாள். மடல் சென்று சேர்ந்து, கிருஷ்ணன் ருக்மணியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி, அவர்கள் திருமணம் நடைபெற்று, அவர்கள் பத்து குழந்தைகள் பெற்றெடுத்தனர். இதன் பிறகுதான் ருக்மணி கடவுளா வழிபடப்பட்டாள். யாரோ ஒரு முகம் தெரியாத பெண் நமக்கு காதல் மடல் அனுப்பியுள்ளால் என்றதும் கிருஷ்ணர் ஒரு நிமிடம் திகைத்து தான் போனார். ஆனால் அவள் எழுதியிருந்த வரிகளில் உண்மையான காதல் வெளிப்பட்டது. அவள் வரிகளில் இருந்த நிஜத்தினை கிருஷ்ணர் ஏற்றுக்கொண்டார். பலராமனை அழைத்துக் கொண்டு ருக்மணியை கடத்த கிருஷ்ணர் கிளம்பிவிட்டார். கல்யாணத்திற்கு பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் காதலுக்கு பஞ்சமே இருந்ததில்லை. கிருஷ்ணர் எவ்வளவு திருமணங்கள் செய்திருந்தாலும், கடைசி வரை காதலோடு இருந்தது ருக்மணியிடம் மட்டுமே. கிருஷ்ணரின் பிரதானமான ராணியாக அவள் இருந்தாள். பெரும்பாலான மக்கள் ராதாகிருஷ்ணன் காதல் கதையில் நம்பிக்கை உடையவர்கள். ஆனால் ராதையை பற்றிய குறிப்புகள் நாட்டுப்புற கதைகளில் மட்டுமே காணப்படுகிறது. கிருஷ்ணனுடைய வாழ்க்கையை விவரிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் மற்றும் மகாபாரதம் இரண்டும் ருக்மணி கிருஷ்ணன் காதல் கதையை தான் கூறுகின்றன. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻 . . #krishnabhakti #krishnalove #tamilreels #postviralシ #மகாபாரதம் #பாகவதம் #கண்ணன் #ருக்மணி #mahabharat #mahabharatham #mahabharatlovers #bhagavadgita #bhagavatham #kannan #rukmani #காதல் #கனவன் மனைவி #🙏🏼சிவன் - பார்வதி #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
காதல் - ShareChat