ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (28.01.2026)* ....................................................................... *''கவலை...! கவலை...!! கவலை...!!!"* ........................................................................... மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை". இங்கு இருக்ககூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா...? எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலையில் மூழ்கிக் கொண்டுதான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள் ஓய்ந்தபாடில்லை... உதாரணமாக: பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவனைப்பும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆசிரியரின் அரவணைப்பும், பெற்றோர்களின் பாசமும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... இளைஞர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும், ஆயிரக்கணக்கான கவலைகள்... நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், இப்படி பல. நன்கு படித்து தேர்விலே நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... தேர்விலே தோல்வி அடைந்தவருக்கு ஏன் இந்த உலகத்தில் வேண்டும், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கபோகும் என்ற கவலை... கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல வேலை கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... வேலை கிடைத்தவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... நல்ல ஊதியம் கிடைத்தவர்களுக்கு தன்னுடைய பணத்தை எப்படி பத்திரமாக சேமித்து வைப்பது என்ற கவலை... திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... வயது முதிர்ந்தவர்களுக்கு தன்னுடைய பிள்ளைகள் தங்களை இந்த முதிர்ந்த வயதில் கவனித்துக் கொள்வார்களா...? மாட்டார்களா...? என்ற கவலை... இப்படியாக கருவரை முதல் கல்லறைக்கு பின்னும் மனிதனின் கவலை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக!, ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கவலையுற்றுதான் இருக்கிறோம்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கின்றது. ஒரு நொடிப் பொழுதினில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது...!* 🔴 *எதுவும் நம் கையில் நிற்பதுமில்லை. இன்றைக்கு என்பது மட்டும்தான் நமது பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, கவலையில்லாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்...!!* ⚫ *கவலையுறுமாறு ஏதேனும் நடந்துவிட்டால், உடனே அந்தக் கவலையை எதிர்த்து நின்று வெற்றிகொள்ள தம்மைத் தயாராக்குபவரே அறிவாளி. நடந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் நடக்க வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளலாம்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
innraya SINTHANAY - 5&0 நேற்று நடந்ததை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நாளை நடக்கப் ுப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் I6orm நடக்க இருப்பதை சிறப்பாக செய்து முடியுங்கள்" . 5&0 நேற்று நடந்ததை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நாளை நடக்கப் ுப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் I6orm நடக்க இருப்பதை சிறப்பாக செய்து முடியுங்கள்" . - ShareChat