ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு ஜைனுதீன்இனிய உழவர் திருநாள் மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். திண்டிவனம் ஜன-15 தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் தை மாதத்தின் இனிய நல்வாழ்த்துகள். திராவிட மக்களின் சார்பாகவும் உழவர் திருநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன. தைப்பொங்கல் திருநாள் தமிழர்களின் உழைப்பையும் பண்பாட்டையும் போற்றும் நாளாகும். விவசாயிகளின் தியாகம் இந்த நாளில் நினைவுகூரப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உழவர் சமூகம் அடித்தளமாக உள்ளது. அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு மேற்கொண்டுவரும் சமூகநீதிச் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உருவாகும் பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை தவிடுப்படியாக்கும் பணியில் உங்கள் தலைமையகம் உறுதியுடன் செயல்படுகிறது. அந்த முயற்சிகளுக்கு தமிழக மக்கள் முழு ஆதரவு அளிக்கின்றனர். இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பும் அமைதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம் தமிழகத்தின் அடையாளமாக திகழ்கிறது. அந்த மரபு தொடர உங்கள் ஆட்சி அவசியமாகிறது. மீண்டும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்பட உங்கள் தலைமை தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமை சமத்துவ வளர்ச்சி ஆகியவற்றின் காவலனாக நீங்கள் திகழ வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்கள் பங்களிப்பு தொடர வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat