ShareChat
click to see wallet page
search
*உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான ஜெபம்..!!* ⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺 பலர் இந்த ஜெப பக்தி முயற்சியை அறிந்து இருக்கலாம். அறியாது இருப்பவர்களுக்கு இந்த பதிவு. உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக நாம் ஜெபிப்பது நம் இறைவனாம் ஆண்டவருக்கு மிக பிடித்தமான ஒன்று. நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் பொழுது நம் ஜெபத்தின் பலனாக விண்ணகம் செல்லும் ஆன்மாக்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள் என்று நாம் அறிவோம். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க சிறந்த நேரம் பகல் 3.00 மணி. இந்த பகல் 3.00 மணி மாபெரும் இரக்கத்தின் நேரம், இந்த நேரத்தில் நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் போது நம் ஜெபத்திற்கு சிறப்பான பலன் கண்டிப்பாக உண்டு என்று *"புனித பாஸ்டினா அம்மாளுக்கு"* நமது இரக்கத்தின் ஆண்டவர் கூறி உள்ளார். (கீழ் கண்ட ஜெபத்தை, நாம் ஒவ்வெரு முறை ஜெபிக்கும் போதும் உத்தரிக்கும் நிலையில் உள்ள 1000 ஆன்மாக்கள் விண்ணகம் செல்லும் என்று நமது ஆண்டவர் *"புனித ஜெர்த்ரூத் அம்மாளுக்கு"* வெளிப்படுத்தி உள்ளார்.) *🙏🏻ஜெபம்..!!🙏🏻* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ *"என்றும் வாழும் தந்தாய்! உமது தெய்வ மகனாகிய இயேசுவின் விலைமதிப்பற்ற திரு இரத்தத்தை இன்று உலகெங்கிலும் செலுத்தப்படும் திருப்பலிகளோடு ஒன்றித்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், உலகெங்குமுள்ள பாவிகளுக்காகவும், அகில திருச்சபையிலுள்ள பாவிகளுக்காகவும், எனது இல்லத்திலும் குடும்பத்திலுமுள்ள பாவிகளுக்காகவும் உமக்கு அர்பணிக்கிறேன்."* 3.00 மணிக்கு ஜெபிக்க தவறினால், நமக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஜெபத்தை ஜெபிக்கலாம் பலன் உண்டு. *நாம் இந்த சிறு ஜெபத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இந்த ஜெப பக்தி முயற்சியை பற்றி அறியாத கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நாம் இந்த ஜெபபக்தி முயற்சியை பற்றி தெரியப்படுத்தலாம்.* நன்றி.🙏 ⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️ *சகல ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும் செபம்* ⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️ ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவிஅழைக்கின்றேன். ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும். ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்? வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்; அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது. என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது; இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது. காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக் ஏனனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துனை பொங்கி வழிகின்றது. இஸ்ராயேலரை அவர் மீட்பார்; அவர்கள் செய்த பாவங்களை; அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார். *🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே. *🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. *🙏🏻செபிப்போமாக:🙏🏻* ⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️ சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் -ஆமென்.🙏🏻 *🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் அளித்தருளும் ஆண்டவரே. *🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. *🌹முதல்:* அவர்கள் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக. *🌻துணை:* ஆமென். 🌸🕊️🌸🕊️🌸🕊️🌸🕊️🌸🕊️🌸 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat