⚜️🪔சிவ ரஹஸ்யம்️🪔⚜️
*தேவரும் அறியாத*
*தேவ தேவனின்* *ரகஸ்யம்*
*மஹேஸம்-39*
பிரியமானவளே..! இப் பிரதோஷ வேளையில் அபிசேகத்திற்காக கஸ்தூரி குங்கும சந்தனம் நிறைந்த குடங்களை என்னிடம் கொடுப்பதிலேயே களைத்துப் போன நம் கணங்களைப் பார்.
இவ்வாறு நம் அபிசேகத்தினால் பிரவாகிக்கும் தீர்த்தத்தை,
இது சர்வத்திலும் மஹா புண்யதிவ்ய தீர்த்தம் எனும் உண்மையை உணர்ந்தவர்களாய் மும்மூர்த்திகளும் சர்வதேவர்களும் சம்ஸாரதுக்கங்களில் இருந்து விடுபட்டு ஆனந்த நிலையடையும் பொருட்டு சேவிக்கின்றனர்.
நான்கு தேவர்களும் உருப்பெற்று சதருத்திரத்தை தோத்திரஞ் செய்ய, திவ்விய பரிமள சந்தனம் மற்றும் ரத்தினங்கள் ஜ்வலிக்கும் வெண்பட்டாடைகளால் கைலாஸேஸ்வர லிங்கத்தை அலங்கரிக்கின்றேன்.
பல்வேறு பத்திரங்கள், மலர்களால் அர்ச்சிக்கப்பட்டு; நெய்யை நிரம்ப வார்க்கப்பெற்று திவ்வியவர்த்திகளோடு விளங்கும் ரத்னதீப ஜாலங்களால் ஜோதிமயமாய் விங்கும் இவ் லிங்கத்தின் அழகைக் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
*சிவ ரகஸ்யம்* தொடரும்*....
சர்வம் சிவார்ப்பணம். #சிவன் பார்வதி ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️ சிவன் வீடியோ ஸ்டேட்டஸ்🙏🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏


