ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 26.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ========= வெள்ளையனின் வினையம் ============================= திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன் வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன் நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப் பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான் மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல் தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப் பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக் கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச் சாதி வரம்பு தானழித்து மாநீசன் மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான் எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப் பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத் தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள் ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை . விளக்கம் ========== மகாவிஷ்ணு திருச்செந்தூரில் மகிழ்ச்சையுடன் பள்ளிகொண்டிருந்த அந்நாளில், தேளின் விஷம் போன்ற மனத்தினையுடையவனும், விலை மாதுவைப் போன்ற நடவடிக்கைகளுக்குச் சொந்தக்காரனுமாகிய ஆங்கிலேயன் உலகம் முழுவதுமிருந்த வாழ்வியல் கட்டுப்பாடுகளையெல்லாம் உடைத்தெறிந்தான். . மேன்மை மிகு சான்றோர்கள் வகுத்து வைத்திருந்த நன்னெறிகளையெல்லாம் சீர் குலைத்தான். மேன்மக்களின் புகழையும், தர்ம நீதியையும், பெருமைகளையும் அழித்தான். இந்நிலையால் பாறையில் வளர்ந்த மாமரமும், முருங்கை மரமும் காய் பலனற்றுப் போவதைப்போல், நற்குணமுள்ள மக்களெல்லாம் தம்முடைய நிலை தவறி, ஒற்றுமை குலைந்து, இழிவான நடவடிக்கையுடைய மானிடம் போல் ஆகிவிட்டார்கள். . அந்த வெண்ணீசனாகிய ஆங்கிலேயன் ஈனச்செயல் புரிவோரைத் தேடிப்பிடித்து அவர்களுக்குப் பவளத்தால் புனைந்த ஆபரணங்களைக் கொடுத்தும், இன்னும் பல்வேறு சலுகைகளைச் செய்தும் அவர்களையெல்லாம் தன் வயமாக்கிக் கொண்டான். . முன்பு ஆண்ட மன்னர்களின் மகுடத்தைப் பின்னர் வரும் மன்னன் அணிந்து ஆட்சிபுரிகின்ற வழக்கத்தை முற்றிலும் மாற்றி, தன்னுடைய நாட்டை இரவலாக அம்மன்னன் ஆளுவது போலாக்கினான். இந்த நாட்டைத் தன் வயப்படுத்தி முன்பிருந்த கலியரசனைத் தனது ஆளாக ஆளவைத்து, முன்பிருந்த சட்ட திட்டங்களையெல்லாம் மாற்றி அமைத்து, தன் எண்ணப்படியே சட்டங்கள் வகுத்தான். . வெண்ணீசன் வகுத்து நடைமுறைப்படுத்திய சட்டங்கள் யாவும் மானமுள்ள மனிதர்களின் மனதையும், வாழ்க்கை முறைகளையும் வெகுவாகப் பாதித்தது. நாளடைவில் சான்றோர்களெல்லாம் தன்னுடைய மகிமைகளையெல்லாம் இழக்க வேண்டியதாயிற்று. இந்நிலையுணர்ந்த வானவ தேவர்களெல்லாம் திருச்செந்தூருக்குச் சென்று மும்மூர்த்திகளும் ஒருமித்தவராகிய மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள். . . அகிலம் ======== சான்றோர்களுக்காகத் தேவர்கள் முறையம் =============================================== ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க் கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன் மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின் மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக் காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள் இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல் புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல் சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன . விளக்கம் ========== ஆதிகாரண அபூர்வ அகப்பொருளே ! வடிவம், முடிவுமில்லா மூலவனே ! தொடக்கமில்லாததும், நித்தியமுமான சமநிலை கர்த்தா ! சோதி வடிவ சொரூபியே ! எங்களுக்கு நேர்ந்துள்ள கவலைகளையெல்லாம் தீர்த்தருளும் அய்யா. . இத்தனை காலமும் நாங்கள் மானத்தோடு வாழ்ந்து விட்டோம். எங்களையெல்லாம் ஆளுகின்றவரே இனிமேல் எங்களால் மானத்தோடு வாழ முடியாதது போலாகிவிட்டது. வெண்ணீசனின் வரவினால் இந்தத் தேசத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் வரம்புகளும் சிதைந்து சீர்குலைந்து விட்டன. . அந்த வெண்ணீசனானவன் இந்தத் தேசத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரந்து விட்டான். ஆகவே, இனியுள்ள இளைய தலைமுறையினர் மானத்தோடு வாழ வகையில்லை. நற்குணத்தோரின் புனித செயல்களையெல்லாம் களங்கப்படுத்தி, வலுவற்ற முருங்கை மரம்போல் முறிந்து விழ வைத்து விட்டான். அந்த கலியர்களின் ஏதுவினால் சான்றோர்கள் ஒற்றுமை இழந்து உருக்குலைந்து வாடுகிறார்கள். . இத்தனை காலமும் நாங்கள் தங்களிடம் முறையிட்டவற்றையெல்லாம் உங்கள் மனத்தில் அடக்கியே வைத்துக் கொண்டிருந்தால் எங்களால் இன்னும் பொறுத்திருக்க முடியாது. எங்கள் சகோதரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களைத் துடைக்காமல் செயலற்றவர் போல் முகவாட்டத்துடன் தலை கவிழ்ந்திருப்பதற்குக் காரணமென்ன? . . அகிலம் ======== மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல் பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல் ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய் முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால் பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம் தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும் பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம் அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ . விளக்கம் ========== மக்களின் துன்பத்தையும், துயரத்தையும் கண்டு மனமிரங்காமல் தாங்கள் கண்டும் காணாதவர்போல் ஒதுங்கி இருப்பதற்கான காரணமென்ன? சான்றோர்கள் படும் இன்னல்களுக்காக மனமிரங்காமல் ஆண்டவரே தாங்கள் அயர்ந்திருப்பது எதற்காக? . எங்களுக்கு இந்த நிலை ஏற்படவேண்டுமென்றா வானவர்களாக இருந்த எங்கள் சகோதரர்களெயெல்லாம் சான்றோர்களாக மனித குலத்தில் பிறவி செய்து, நீசகுலத்தாரோடு நிம்மதியற்று வாழவா கண்ணியிட்டு வைத்தீர். பாதகர்களாகிய அந்த நீசகுலத்தவர்களெல்லாம், எங்களோடிருந்து, தங்களால் பூலோகத்தில் பிறப்பிக்கப்பட்ட தேவர்களைப் படுத்தும் கொடுமைகளையெல்லாம் கயிலையில் இருக்கும் சக்தியும் சிவபெருமானும் கூடத் தெரிந்து வைத்திருக்கிறார்களே, பூவுலகில் பவனி வந்து கொண்டிருக்கும் தங்களுக்குத் தெரியாதிருப்பதேன்? . எங்களுடைய துன்பத்தையும், துயரத்தையும், மன இரக்கத்தோடு பாருங்கள் அய்யா. யுகத்துக்கு யுகம் தாங்கள் பூவுலகில் அவதரிக்கும் காலங்களிலெல்லாம் நாங்களும் பூவுலகில் பிறந்து செய்து வந்த ஊழியங்களையெல்லாம் அகற்றி அருள்பாலித்த அச்சுதரல்லவா தாங்கள். . . அகிலம் ======== மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால் இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான் புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ இப்படியே தேவர் எல்லோரு முறையமிட அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே . அம்மை உமை இரங்கல் ---------------------------------------------- நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின் அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள் . விளக்கம் ========== வலங்கையர் என்ற உயர்வோடு எங்களை மண்ணுலகில் மனிதர்களாகப் பிறப்பித்தது மட்டுமின்றி, எங்களோடு எவ்வகை உறவுமில்லாத பாதகர்களான நீசர்களையும், அங்கே படைத்ததினால் இத்தனை கஷ்டங்களும் எங்களுக்கு ஏற்பட்டது. உங்களுடைய பிள்ளைகளாக எங்களைப் பூலோகத்தில் பெற்று வைத்த தாங்கள், நாங்கள் படும் பாட்டை கண்டதில்லையா காரணரே? . நாங்கள் இத்தனையும் எடுத்துரைத்தும் இன்னும் தங்கள் மனம் இரங்கவே இல்லையா? என்று தேவர்களெல்லாம் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே அன்னை உமையவள் எழுந்தருளி சர்வ சக்திகளையும் தனதுள் கொண்ட மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பணிந்து தன்னுடைய மனத்துயரை மாயோனிடத்தில் முறையிட முற்படுகிறாள். . . தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா இற்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும் மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்  செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே மைதான மான வாக்குநமக் காச்சுதெனக் கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு அன்பான் சீமை அரசாள நாளாச்சு தன்பா லடைய சரியாச்சு தென்மகனே மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில் கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே குடியரசுதினநலவாழ்த்துக்கள் அகிலம்  26.01.2026 Ouura விளக்கின் Gunou வீரத்தனமாய் கோ ஒளி இருங்க அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா இற்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும் மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்  செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே மைதான மான வாக்குநமக் காச்சுதெனக் கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு அன்பான் சீமை அரசாள நாளாச்சு தன்பா லடைய சரியாச்சு தென்மகனே மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில் கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே குடியரசுதினநலவாழ்த்துக்கள் அகிலம்  26.01.2026 Ouura விளக்கின் Gunou வீரத்தனமாய் கோ ஒளி இருங்க - ShareChat