#🙏ஏகாதசி🕉️ #வைகுண்ட ஏகாதசி #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #✡️மார்கழி மாத ஜோதிடம் #🙏🏻மார்கழி மாத சிறப்பு *வைகுண்ட* *ஏகாதசி*
*30-12-2025.*
*விரதம் இருப்பது* *எப்படி*
*வைகுண்ட ஏகாதசி* *விரதமுறை:*
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன்தினம் தசமி திதியில் (29-12-2025) ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.
மறுநாள் (30-12-2025) வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று சொர்க்கவால் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் உணவு எதுவும் உண்ணாமல் (முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் பால், தயிர், விதையில்லா பழவகைகள் மற்றும் இளநீர் மட்டும் சாப்பிட்டு) இரவு முழுவதும் கண்விழித்து இறை நாமம் சொல்லி அடுத்த நாள் (31-12-2025) துவாதசி திதி அன்று அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும். 21 வகை காய்கறி வகைகள் கொண்டு சமைத்த உணவை பொழுது விடியுமுன் உண்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு "பாரனை'' (விரதம்) முடித்தல் என்று பொருள்.
துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.
ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் அசகாய சூரராக விளங்குவர். பொறுமை, இன்சொல், நுண்ணறிவு, சாந்தமே ஜெயம் எனும் கோபம் தணிந்த ஆற்றல் என சகல நற்குணங்களுடன் இருப்பார்கள்.
🙏🪷🙏


