ஸ்ரீ (969) #ஆண்டாள் *திருப்பாவை* வேதம் அனைத்திற்கும் வித்து.
வங்கக் கடல் கடைந்த திருமகள் கேள்வனான கண்ணனை சந்திரனைப் போன்ற அழகிய திருமுகத்தை பெற்ற,
அழகிய ஆபரணங்களைப் பூண்ட ஆய்ச்சிறுமிகள் அடைந்து வணங்கி பறையாகிய உறுதிப் பொருளை அடைந்தனர்.
இவ்வாறு *எம்பெருமானிடம்* அவர்கள் பறையினை (கைங்கர்யம்) பெற்ற வழிமுறைகளை அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதாரம் செய்து தாமரை மலரால் ஆன குளிர்ந்த மாலையை அணிந்துள்ள ஸ்ரீ *பெரியாழ்வாருடைய* திருமகளான *ஆண்டாள்* அருளிச்செய்த , சங்கத்தமிழ் பாமாலை ஆகிய இந்த முப்பது பாசுரங்களையும் தவறாமல் ஓதுபவர்கள் நான்கு திரு த்தோள்களையும் சிவந்த திருக்கண்களையும் அழகிய திரு முகத்தினையும் பெற்ற *திருமாலின்* திருவருளால் எங்கும் பெற்று இன்புறுவர்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏


