ShareChat
click to see wallet page
search
அவர் சிறையில் இருந்த காலத்தில், அவரது மனைவி ஜான்சிக்கும் அவரது தம்பியின் நண்பரான கார் டிரைவர் சூரிய நாராயணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்த லாலு ஸ்ரீனுவை பார்க்கச் சென்றபோது, தங்களின் விவகாரம் அவருக்குத் தெரிந்ததை ஜான்சி உணர்ந்தார். அப்போது லாலு ஸ்ரீனு அவர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், அவர் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பே அவரைக் தீர்த்துக்கட்ட ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் திட்டம் தீட்டினார். இதற்காக குண்டூரைச் சேர்ந்த ஒரு கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசி, ஒரு லட்சத்தை முன்பணமாக ஜான்சி வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு லாலு ஸ்ரீனு ஜாமீனில் வெளியே வந்தபோது, அவரை வரவேற்க ஜான்சி தனது தம்பியுடன் சிறை வாசலில் காரில் காத்திருந்தார். கணவரை காரில் ஏற்றிக்கொண்டு வரும் வழியில், கள்ளக்காதலன் சூரிய நாராயணாவும் கூலிப்படையினரும் மற்றொரு காரில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். இரண்டு இடங்களில் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த நிலையில், லாலு ஸ்ரீனு சிறுநீர் கழிக்க காரை நிறுத்தச் சொன்னபோது சரியான சமயம் பார்த்து ஜான்சி மற்றும் அவரது தம்பி ஆகியோர் லாலுவின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். கண்ணில் மிளகாய்ப் பொடி விழுந்து லாலு துடித்த நிலையில், கூலிப்படையினர் அவரைத் தூக்கி காரில் போட்டனர். அப்போது ஜான்சியும் அவரது தம்பியும் சேர்ந்து கத்தியால் லாலுவின் வயிற்றில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தனர். பின்னர் கள்ளக்காதலனின் அறிவுரைப்படி, ஜான்சியும் அவரது தம்பியும் போலீசில் சரணடைந்து இது ஒரு தற்காப்பு நடவடிக்கை போல காட்ட முயன்றனர். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்தது அம்பலமானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢ஜனவரி 25 முக்கிய தகவல் 🫠
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - "என் புருஷன் செத்தாதான் உன் கூட சந்தோசமா இ (88 முடியும்" தம்பியுடன் சேர்ந்து மனைவி போட்ட சினிமா பாணி ஸ்கெட்ச். நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்! "என் புருஷன் செத்தாதான் உன் கூட சந்தோசமா இ (88 முடியும்" தம்பியுடன் சேர்ந்து மனைவி போட்ட சினிமா பாணி ஸ்கெட்ச். நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்! - ShareChat