ShareChat
click to see wallet page
search
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (13.01.2026) ......................................................... *''கனவை நனவாக்க வேண்டும்...!* ............................................................ வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் கனவு என்பது மிக மிக அவசியமாகும்... கனவை மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத் தான் இருக்கும், கனவோடு இணைந்து பயணம் செய்தால் தான் அது செயல் வடிவம் பெறும்... வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள், கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள்... நாம் தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக் கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். பலருக்கும் பல குறிக்கோள்கள் இருக்கும், அதை அடைவதற்கான முயற்சியில் தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். இருந்தாலும் உங்களது குறிக்கோள்களை, முயற்சிகளை மட்டும் கைவிடாதீர்கள்... *ஆம் நண்பர்களே...!* 🟡 நீங்கள் கண்ட குறிக்கோள் கனவை அடைய எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருங்கள். கனவில் இருந்து தான் சிந்தனை பிறக்கும். உங்கள் சிந்தனை தான் செயல்களாகும்... 🔴 உங்கள் குறிக்கோள் கனவை படிப்படியாக நடைமுறைப்படுத்துதலே வெற்றியாகும். மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் கனவு மெய்ப்பட வேண்டும்...!! ⚫ உங்களின் வெற்றி முகவரி இன்னொருவருக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், உங்களின் கனவை இன்றே நனவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்...!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
உற்சாக பானம்# - ஒரு முறை வந்தால் அது கனவுஇருமுறை வந்தால் அது ஆசை.மீண்டும் மீண்டும் வந்தா6 அதுதான் உங்கள் இலட்சியம் . அப்துல் கலாம்)  ஒரு முறை வந்தால் அது கனவுஇருமுறை வந்தால் அது ஆசை.மீண்டும் மீண்டும் வந்தா6 அதுதான் உங்கள் இலட்சியம் . அப்துல் கலாம்) - ShareChat