யாரோ ஒருவர் தனக்காக
எழுதும் எழுத்துக்கள்
இன்னொருவருக்கு
எப்படித்தான்
பொருந்தி போகிறதோ..
அந்த எழுத்துக்கள் தங்களுக்காக
எழுதி அர்ப்பணிக்கப்பட்டது போல
எண்ணிக்கொள்கிறார்கள்,..
ஒரு கவிதை தொடங்கி முடியும்
வரை தேம்பித் தேம்பி
அழுது விடுகிறார்கள்..
மனிதர்கள் அப்படி இலேசானவர்கள்
தங்கள் பிரியத்துக்குரியவர்களை
ஒரு கவிதைக்குள்ளோ அல்லது
ஒரு பாடலுக்குள்ளோ அவ்வளவு
எளிதில் நிரப்பி வைத்து
பழக்கப்பட்டவர்கள்..
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

