ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை: மருத்துவர். இரா. ஸ்டாலின் எஸ்.பி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும் ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஊருக்கு ஒரு காவலர்’ திட்டம் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், ஊர் மட்டத்தில் நேரடி கண்காணிப்பை உறுதி செய்து, குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் பெரிதும் பயனளித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் பகுதியில் தனிப்பட்ட ஒரு காவலரை நியமித்ததற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும் ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இத்திட்டம் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்புடனும், அச்சமின்றியும் வாழும் சூழல் உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற மக்கள் நலக் காவல் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், காவல் துறையின் இந்த முயற்சி சமூக அமைதிக்கு வலுவூட்டுவதாகவும் பாராட்டினார்.
மாவட்ட அளவில் காவல் துறையின் இந்த முன்முயற்சி, பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
இது போன்ற சிறப்பான திட்டங்களை தமிழ் நாடு முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


