மோடிஜியின் ஜோர்டான் விஜயம் தொடர்பான பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக வைரலாகிக்கொண்டு இருக்கின்றன.
ஜி எத்தனையோ நாடுகளுக்கு செல்கிறார் ஆனால் குறிப்பிட்ட சில நாட்டு பயணங்கள் மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
மோடிஜியின் ரஷ்யா பயணம், சீன பயணம், அமெரிக்க விஜயம் எல்லாம் உலக அரசியல் மேடையில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது ஒரு வகையில் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் Why ஜோர்டான்….?
சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஜோர்டான் மண்ணில் கால் பதிப்பது இதுவே முதல் தடவை.
ஏனைய அரபு நாடுகளைப் போல ஜோர்டான் என்பது வெறும் நாடல்ல. அது மேற்கு ஆசியாவின் இதயம். இஸ்ரேல், எகிப்து, ஈராக் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) என ரத்த ஆறு ஓடும் எல்லைகளுக்கு நடுவே ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் தொகையுடன் அமைதி காக்கும் தேசம். சுமார் கி.மு 300-லேயே ரோஸ் சிட்டி' என்று அழைக்கப்படும் 'பெட்ரா' (Petra) என்ற மிரட்டலான நகரத்தை ஜஸ்ட் ஒரு பாறையை குடைந்து மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கிய அசாத்திய திறமைசாலிகளைக் கொண்ட நாடு.
இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் 41-வது நேரடி வாரிசான மன்னர் அப்துல்லா II-ன் ஆட்சியின் கீழ் உள்ள புனித பூமி.
இத்தனை பெருமைமிகு வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்டிற்குச் சென்ற மோடிஜிக்கு அங்கு கிடைத்த ராஜ உபசாரம் தான் உலக நாடுகளை மீண்டும் ஒருமுறை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.
பொதுவாக ஒரு நாட்டு தலைவர் இன்னொரு நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவருக்கான சகல மரியாதையுடன் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுவார்.
ஆனால்,
வரலாற்றிலேயே முதல் தடவையாக ஜோர்டான் அரசர் அப்துல்லா II-ன் மூத்த மகனான இளவரசர் அல்ஹாசன் பின் அப்துல்லா அவர்களே நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று மோடிஜியை வரவேற்றதுடன் மட்டும் நின்றுவிடாமல் தனது காரிலேயே ஜியை அமர வைத்துத் தானே அந்தக் காரை ஓட்டிச் சென்றது தான் இங்கு மிகப்பெரிய ஹைலைட்!!!
ஏனைய நாட்டு தலைவர்கள் ஜியை தமது காரில் அழைத்துச் சென்றிருந்தாலும் அங்கு ஓட்டுநர்கள் இருந்தனர். ஆனால் ஜோர்தானில் பட்டத்து இளவரசரே ஓட்டுநராக மாறி மோடிஜிக்கு ஜோர்டான் தலைநகரை முழுமையாகச் சுற்றிக் காட்டியதுடன், மீண்டும் விமான நிலையம் வரை அவரே அழைத்து வந்து வழி அனுப்பியும் வைத்தத இந்த 'கார் டிப்ளமசி' பயணம் தான் இந்த சந்திப்பு இத்தனை கவனிப்பு பெற மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இது மோடிஜி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வரவேற்பு. அவர்மேல் உலக தலைவர்கள் வைத்திருக்கும் அன்பு. சர்வதேசம் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதை. அவரால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பதற்றமான சூழலில், இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேணிக்கொண்டே, அரபு நாடுகளான ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியாவையும் அரவணைத்துச் செல்வது தான் மோடி ஜியின் சாணக்கியத் தந்திரம். அமெரிக்காவின் வரி விதிப்புகள், ரஷ்யாவுடனான நட்பு குறித்த பல அழுத்தங்கள் ஏற்கனவே இந்தியா மேல் இருந்தாலும், இந்தியா தனது அணிசேராக் கொள்கையில் உறுதியாக இருப்பதை இந்த சந்திப்பின் மூலம் மோடிஜி மீண்டுமொருமுறை உலக நாடுகளுக்கு நிரூபித்துவிட்டார்.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் பகா… பகா…. என்று ஒன்றை மற்றொன்று பகைத்துக் கொண்டிருக்கும் வேளையில், பட்டத்து இளவரசரே தேடி வந்து வரவேற்று, கார் ஓட்டும் அளவிற்கு ஒரு நாட்டின் அன்பைப் பெறுவது எல்லாம் சாதாரண விஷயமா என்ன?
சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவை அடுத்தடுத்த தளங்களுக்கு தூக்கிச் சென்றுகொண்டே இருக்கிறார் ஜி. உலகின் ஒரு மூலையில் ரஷ்யாவும், மறுமுனையில் அமெரிக்காவும் மோடிஜியின் நட்பிற்காகக் தவம் கிடக்கின்றன. இனி எழுதப்படும் இந்திய வரலாறு மோடிஜியின் பெயரை தவிர்த்து சாத்தியமே இல்லை எனும் அளவுக்கு அவர் சாதித்து விட்டார்.
குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் haters கதறிக் கொண்டே இருங்கள்!!
💥💥💥
#🧓பிரதமர் மோடி #🙋♂️அண்ணாமலை #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #📺வைரல் தகவல்🤩


