#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
*18 January 1996*
என். டி. ராமராவ் நினைவு நாள்.
இவர் ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக 1968 ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
இவரது மகன்களும் பேரன்களும் கூட தற்போது திரைப்பட நடிகர்களாக உள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இவரது மருமகன் ஆவார்.


