-
ShareChat
click to see wallet page
@shabbir0360
shabbir0360
-
@shabbir0360
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29 உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது செப்டம்பர் -29 World Heart Day is celebrated all over the world today. World Heart Day September-29 ❤ நடைப்பெயற்ச்சி..Walk. தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்கள் இதயத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. Walking for 30 minutes continuously not only helps your heart but also improves blood circulation, eliminates toxins, and improves metabolism. யோகா பயிற்சியினால் சுவாசத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. Yoga helps keep the heart healthy by improving breathing, controlling blood pressure, improving heart rate, controlling bad cholesterol levels, and increasing blood circulation
உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29 - ShareChat
#உலக இருதய தினம் இன்று உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 29 ,உறக்கம்...Sleep Today, World Heart Day is celebrated all over the world. September 29, World Heart Day September-29 ❤ போதுமான உறக்கம்; உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு தூக்கம் அவசியம். Adequate sleep is essential for the body to rejuvenate. தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். Lack of sleep increases the risk of heart disease, heart attack, diabetes, and stroke. இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம். In such a situation, good sleep is essential to follow a healthy lifestyle.
உலக இருதய தினம் இன்று - ShareChat
#வாழை இலை ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா..? இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க. ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம். அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது. அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம். அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம். எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை. வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது! என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல'? பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்! தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்.. சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்? சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும். அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும். இலையோட மேல் பக்கம், `தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது? குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு! இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை. பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம். வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது! நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!!
வாழை இலை - ShareChat
#உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29 உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 29, இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது. கரோனரி தமனிகளில் கொழுப்பு மற்றும் கால்சிபைட் பிளேக் குவிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவு பழக்கம் மற்றும் புகைத்தல்,மது போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கு கூட மாரடைப்பு வருவதை காண முடிகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க
உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29 - முனித உடலின் மகத்தான இயந்திரம் இதயம் #WorlaHHeorDoy செப்டம்பரீ  29 న இருதய உலக தினம்  முனித உடலின் மகத்தான இயந்திரம் இதயம் #WorlaHHeorDoy செப்டம்பரீ  29 న இருதய உலக தினம் - ShareChat
#வாழ்க்கை பயணத்தில்... வாழ்க்கை பயணத்தில்... In the journey of life... எந்த எதிர்பார்ப்பும் இன்றி... எதார்த்தமாக வாழப்பழகி கொள்ளுங்கள்...! Without any expectations... Live realistically...! அனைத்து சூழ்நிலைகளையும்... எளிதில் கடந்து விடலாம்...!!! All situations... Can pass easily...!!! மற்றவர்களின் வார்த்தைகளை விட... அனுபவமே உண்மையான, சிறந்த வழிகாட்டியாகும்.! More than other people's words... Experience is the true and best guide! நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும். For the mistakes we make in our actions The name we have given is experience. இனிய இரவு வணக்கம்...Good Night
வாழ்க்கை பயணத்தில்... - ShareChat
#பிறப்பு மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை...!* *உயிர் உள்ள வரைதான் நட்பு பந்தம் - பாசம் எல்லாம்....!* *மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே...!* *வாழும் வரை சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வோம்...!* *நல்ல உள்ளங்களை சேகரிப்போம்..
பிறப்பு - ShareChat
#ஆணவம் வேண்டாம் நான்தான் பெரிய ஆள், எனது கட்டளைக்கு அனைவரும் கட்டு பட வேண்டும் தற்பெருமை எண்ணத்தை கைவிடுங்ககள் இல்லையேல்உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள் உங்களுடன் போலியாகதான் பழகுவார்கள் 🍂வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவித்து முடிந்த அளவு தானம்,தர்மம் செய்து புண்ணியத்தை சேர்த்து மறுமை வாழ்க்கையை அழகாக மாற்றி மறுமை வீட்டை அழகாக்கிக் கொள்ளுங்கள் 🍂உங்கள் குழந்தைகளுக்கு அல்குர்ஆன் அல் ஹதீஸ்களை கற்றுக் கொடுங்கள் 🍂உயிரினங்கள் மீது கருணை காட்ட கற்றுக் கொடுங்கள் 🍂உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீர்கள் 🍂இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம்,சில ஆண்டுகளில் இந்த பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில் வாழ பழகுங்கள் 🍂இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் மறுமை வரை உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 🍂உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாவும் ஆரோக்கியமாகவும் வைக்க முயற்சியுங்கள் 🍂வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும் அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருந்து விடாதீர்கள் 🍂குறைந்தது 4 பேருக்காவது நன்மைகள் செய்யுங்கள் 🍂ஏழைகள் அனாதைகள் ஊனமுற்றவர்கள் வயோதிபர்கள் மற்றும் முடியாதவர்கள் இவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்யுங்கள் 🍂இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள் 🍂பெண்,மண்,பணம், காசு,துட்டு, மணி குடி போதை போன்ற வற்றின் பின்னால் அலையாமல் நல்ல மனிதனாக வாழ பழகிகொள்ளுங்கள்! 🍂இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த அழகிய வாழ்வுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள் #அல்ஹம்துலில்லாஹ் 🤲எமது வாழ்க்கை நலமாகவும் வளமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய ஏக இறைவன் எம் அனைவருக்கும் நல்லருள்புரிவானாக 🤲யா அல்லாஹ்! இன்றைய நாளுக்கான அனைத்து பாக்கியங்களையும் உனது அருளையும் நிஃமத்துக்களையும் எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்.✍🏼🌹
ஆணவம் வேண்டாம் - ShareChat
#லதா மங்கேசுக்கர் பிறந்தநாள் இன்று லதா மங்கேசுக்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929* – 6 பெப்ரவரி 2022) இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது. குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பல பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்றார். 1987-இல் இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், நாட்டிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கான விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது, இது எம். எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண் பாடகி ஆவார். 2007 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தனது உயரிய குடிமக்கள் விருதான, செவாலியே விருதை அவருக்கு வழங்கியது. லதா மங்கேசுக்கர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு பிலிம்பேர் சிறப்பு விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1974 இல், இலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன. 1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. 1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக, மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த லதா மங்கேஷ்கர், 2022 பெப்ரவரி 6 அன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
லதா மங்கேசுக்கர் பிறந்தநாள் இன்று - ShareChat
வரலாற்றில் இன்று செப்டம்பர் 28 1889 - ஃபிரான்சில் நடைபெற்ற, எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பொது மாநாட்டில், மீட்டர், கிலோகிராம் ஆகியவற்றின் அளவுகளும், இவற்றை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்ட சமன்பாடுகளுக்காக, ஹைட்ரஜன் வெப்பமானி செண்ட்டிகிரேட் அளவையும் உருவாக்கப்பட்ட நாள் இவற்றிற்கான மூல முன்மாதிரிகள் (ப்ரோட்டோடைப்), பிளாட்டினம்-இரிடியத்தால் உருவாக்கப்பட்டதுடன், அவற்றின் நகல்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1668இலேயே ஜான் வில்க்கின்ஸ் என்ற ஆங்கிலேயே மெய்யிலாளர், பதின்ம அடிப்படையிலான நீள அளவையை முன்மொழிந்திருந்தார். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின், அறிவியல் முன்னேற்றங்களின் கணக்கீடுகளுக்கு உதவியாக இல்லாத பழைய அளவீடுகளை மாறற விரும்பிய ஃப்ரெஞ்சு அறிவியல் கழகம் ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையமே 1791இல் பதின்ம அடிப்படையிலான நீள அளவையையும், மீட்டர் என்ற சொல்லையும் கொண்டுவந்தது. கிரேக்க மொழியில் அளவிடுதல், எண்ணுதல், ஒப்பிடுதல் என்ற பொருள்தரும் வினைச் சொல்லான மீட்ரியோ, அளவீடு என்ற பொருள்தரும் பெயர்ச்சொல்லான மீட்ரான் ஆகியவற்றிலிருந்து இந்த மீட்டர் வந்தது. இதற்கான அளவு பலவாறு நிர்ணயிக்கப்பட்டு, பொதுத்தன்மை இல்லாமலிருந்த நிலையில்தான், 1875 மே 20 அன்று 17 நாடுகள் கையெழுத்திட்ட மீட்டர் ஒப்பந்தத்தின்படி, இந்த முதல் மாநாடு இவற்றுக்கான பொது அளவை நிர்ணயித்தது. இந்த மாநாடு நான்காண்டுகளுக்கு ஒருமுறை கூடி பல்வேறு அளவைகளையும் நிர்ணயம் செய்கிறது. எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பன்னாட்டு அமைப்பு, இதற்கான குழுவின்மூலம் இதனை நடைமுறைப்படுத்துகிறது. மூன்றாவது (1901) மாநாட்டில் லிட்டர், நான்காவது (1907) மாநாட்டில் காரட், ஒன்பதாவது (1948) மாநாட்டில் ஆம்பியர், வாட் முதலான அளவைகள் வரையறுக்கப்பட்டன. 1948 மாநாட்டில்தான் வெப்ப அளவைக்கு பாகை செல்சியஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மீட்டர், கிலோகிராம், நொடி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இது எம்கேஎஸ் முறை என்றழைக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, 1960இல் நடைபெற்ற 11ஆவது மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அலகுகளுக்கான பன்னாட்டு (எஸ்ஐ) முறையை, அமெரிக்கா, லைபீரியா, மியான்மர் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றன. #வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - weathereye 50 40 30 20 10 0 ৫6 -10 20 ஏ0 30 EosuN C 11|880 0  0 790 100 7 7 9 Il weathereye 50 40 30 20 10 0 ৫6 -10 20 ஏ0 30 EosuN C 11|880 0  0 790 100 7 7 9 Il - ShareChat
#சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று, தேசிய சாக்லேட் பால் தினத்தை நினைவுகூரும் வகையில், மக்கள் உயரமான, பனிக்கட்டி சாக்லேட் பாலை அனுபவிக்கிறார்கள் பல ஆய்வுகள் சாக்லேட் பால் ஒரு பிந்தைய வொர்க்அவுட்டை மீட்டெடுக்கும் பானமாகப் பாராட்டியுள்ளன. இந்த பானத்தை எந்த அமெரிக்க மதிய உணவகத்திலும் காணலாம், இது ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்தது. இந்த சாக்லேட் மகிழ்ச்சி 1400 களில் இருந்து வருகிறது, மேலும் அதன் புகழ் வளர்ந்து வருகிறது. வாழ்க்கையின் சிறிய இன்பங்களை ரசிக்கவும் பாராட்டவும் இது சரியான சந்தர்ப்பம். தேசிய சாக்லேட் பால் தினம் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் நமது குழந்தை பருவ உணர்வுகள் கூச்சலிடுகின்றன. இது அதிகப்படியான காஃபின் இல்லை. சாக்லேட் பாலில் உள்ள காஃபின் உள்ளடக்கம் காஃபின் நீக்கப்பட்ட பானங்களுடன் ஒப்பிடத்தக்கது. 8-அவுன்ஸ் சேவையில் 2 முதல் 7 மில்லிகிராம் காஃபின் உள்ளது. பல ஆய்வுகள் சாக்லேட் பால் ஒரு பிந்தைய வொர்க்அவுட்டை மீட்டெடுக்கும் பானமாகப் பாராட்டியுள்ளன நிச்சயமாக, சாக்லேட் பால் வரலாறு சாக்லேட்டின் கண்டுபிடிப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சூடான சாக்லேட் பானங்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கப்படுகின்றன.
சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 - ShareChat