*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹*
*பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.*
*ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவை எனக்கு அறிவுரை தருகின்றன.*
*நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது.*
*உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.*
*உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.*
*வாயை ‘ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.*
(திருப்பாடல் 119: 14, 24, 72,103, 111,131)
*✝️ஜெபிப்போமாக :🛐*
*அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில், நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகின்றேன், துதிக்கின்றேன், உம்மை ஆராதிக்கின்றேன்.*
*இறைவா! தேனினும் இனிய உம் இறைச்சொற்கள், என் நாவுக்கு எத்துணை இனிமையானவையாக இருக்கின்றன.*
*தந்தையே! எங்களுடைய வாழ்விற்கு வளமும், நலமும், இனிமையும் சேர்க்கும் உம்முடைய இறைவார்த்தையை உள்வாங்கி, அதன்படி நடக்க நாள்தோரும் முயல்வேன்.*
*இயேசுவே! ஆலயத்தில் வேண்டுதல் புரியும் நேரத்தில் மற்றும் திருப்பலி நேரத்தில், மனதை ஒரு முகப்படுத்தி எல்லாம்வல்ல இறைவனாகிய உம்மிடம் நான், முழுக்கவனமும் செலுத்தாமல், எண்ணங்களை அலைபாய விட்டதற்காக, வருந்துகிறேன்.*
*உமது இறைவார்த்தையை புறக்கணித்த அந்த தருணங்களுக்காக, மனம்வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மன்னிப்பின் தேவனே! மனமிரங்கி மன்னியும் அப்பா.*
*இயேசுவே! உம்முடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, தங்களது பணிகளில் ஆர்வமாய் இருக்கும் எண்ணற்ற மக்களுக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.*
*தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம் என்னோடு என்றும் இருக்க அருள் புரியும்.*
*ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்


