#🙏ஏகாதசி🕉️ #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️மார்கழி மாத ஜோதிடம் *மார்கழி மாதம் 12ம் நாள் 27-டிசம்பர்-25 சனிக்கிழமை அஷ்டமி திதி கூடிய நாளில்*
மாலோலன், மாயவன், மதுசூதனன், அஷ்டமியில் பிறந்த கண்ணன்- ஸ்ரீ கிருஷ்ண பெருமாளையும் அவன்
மனதை கவர்ந்த ப்ரியே ஸ்ரீ ராதா ராணியையும் நம் தற்சமயம் எடுத்த பிறவி பந்த பாசம் நீக்கி
ஸ்ரீ ராதா ராணியை போல் கண்ணன் மனதை கவர்ந்து அவன் பத்ம பாதங்களில் பாசம் வைத்து அவன்
தாமரை பாதங்களில் சேர்ந்திட போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
சின்னந் சிறு கிளி போல் பறந்து வந்து உன் தாமரை மலர் பாதங்களில் அடைக்கலம் ஆகிடணும் கண்ணா
சின்னந் சிறு பூத்த அழகு மலர் போல் ஆடி அசைந்து கண்ணனுடன் சேர்ந்து ஆடிட கண்டேன் உனை ராதே
பிள்ளை கனியமுதே பேசும் பொற்சித்திரமே ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் கண்ணா
தங்க பதுமை போல் வளர்ந்து கிளி போல் கொஞ்சி பேசுகிறாய் அதை கேட்டு என் மனம் சிலிர்கிறதே ராதே
பூ பந்துகள் இரண்டு உருண்டு குதித்து வருவதுபோல் நீங்கள் ஓடி வருவதை கண்டால் என் உள்ளம் மகிழ்ச்சியில்
துள்ளி குதித்திடுதே, கண்ணா , ராதே
கன்னம் குழிய ராதே நீ பாடி திரிதல் கண்டால் கண்ணன் தானும் உன்னுடன் பாடி ஆடி மகிழ்கின்றான், கண்ணா ராதே
உங்களை அப்படியே அள்ளி அணைத்திடவே என் மேனி துள்ளி குதிக்கிறதே கண்ணா ராதே
ஊரார் உங்கள் இருவரையும் புகழ்ந்து பேசினால் என் மனது உங்கள் இருவருக்கும் திருஷ்டி கழிக்க தோணுதே
உங்கள் இருவரின் உச்சி தனை முகர்ந்தால் என் மனம் கர்வம் பொங்கி வழிகிறதே கண்ணா , ராதே
கண்ணா நீ வேறோ ராதா வேறோ எனக்கு நீங்க இருவரும் என்னை கலி தீர்த்து தாமரை பாதங்களில் சேர்த்திட வந்தீர்களன்றோ கண்ணா ராதே
🪷🪷🪷


