ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏கோவில் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 இறுதியாக எங்கு சென்று ஐக்கியமானது தெரியுமா.....???* தேவர்களும் அசுரர்களும் சாகா வரம் தந்திடும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்திட வாசுகி என்ற அரவத்தை மத்தாக நட்டு தாம்பு கயிறாக பயன்படுத்தி... தேவர்கள் வாசுகியின் வால் பகுதியையும் அசுரர்கள் வாசுகியின் தலைப்பகுதியும் பிடித்து பாற்கடலை கடைந்தனர்..* அமிர்தம்_வரும்.... அமிர்தம் வரும்... என்று எதிர்பார்த்த வேளையிலே வந்ததோ விஷம். வலி பொறுக்க முடியாத வாசுகி நஞ்சினை கக்கியது. அது சாதாரண விஷமும் அல்ல. ஆலகால விஷம். தேவர்கள்_ஏமாற்றம் அடைந்து வாசுகியை திட்டி தீர்த்து சபித்தனர். இதனால் தேவர்களின் சாபத்திற்கு உள்ளானார் வாசுகி. 🙏🏼தேவர்களின் சாபத்திற்கு உள்ளான வாசுகி துன்ப பட்டால். துயரப்பட்டாள்.. கடும் நோய்க்கு உள்ளானார். பிணியிலும் கூட ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தார். பல_ஆண்டுகள் தவம் இருந்த வாசுகிக்கி ஈசன் காட்சி தந்தார் உனது சாபம் மோட்சம் நீங்கிட நீ தெற்கே உள்ள ஜெயபுரம் எனும் ஊரில் ( இன்று திருவெற்றியூர் ) உள்ள சிவாலயத்தில் சிவதீர்த்த குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் உனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும் என ஈசன் கூறி மறைந்தார். 🙏🏼 சிவபெருமானின் கட்டளையை ஏற்று ஜெயபுரம் (திருவெற்றியூர்) சென்றார் வாசுகி. அங்குள்ள சிவ தீர்த்த குளத்தில் நீராடி ஈசனையும் அன்னை பாகம்பிரியாள் அம்மனையும் வணங்கி சாபம் நீங்கி மோட்சம் பெற்றார். தனக்கு சாபம் நீங்கியதால் நோயும் நீங்கியது. அந்தக்குளம் பின்பு வாசுகி தீர்த்த திருக்குளம் என்ற பெயரும் மாறியது. தனது_சாபமும் நோயும் நீங்கியதால் வாசுகி நாகம் திருவெற்றியூர் ஆலயத்தில் சுற்றுப்பிரகார ஆரம்பத்தில் ஓர் இடத்தில் ஐக்கியமானர். அந்த இடம் சிவனின் அருளால் புற்றாக மாறி இன்றும் புத்தடி நாகராக வாசுகி விளங்குகிறாள். வாசுகி நாகம் நீராடிய சிவ தீர்த்த குளம் இன்று வாசுகி தீர்த்தமாகவே பெயர் பெற்று அபூர்வ சக்தியுடன் விளங்குகிறது.* இன்றும்_தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வியாழன் வெள்ளி, நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வாசுகி தீர்த்த திருக்குளத்தில் புனித நீராடி நோய்கள் நீங்கி, பாவ- சாபங்கள் அகன்று நலம் பெறுகிறார்கள். தீராத நோய்கள் தீர்ந்திடும் திருக்குளமாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் கோயில் குளமான வாசுகி தீர்த்தம் இன்றும் விளங்குகிறது. இந்த குளத்தின் புனிதத்தை அறிந்து குளத்தில் அசுத்தபடுத்தும் செயல்களை செய்ய கூடாது எனவும், வாசுகி தீர்த்தத்தை சுத்தமாகும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவும் பிறப்பித்து இருந்தது. ஓம் நமசிவாய
🙏ஆன்மீகம் - 2 @ సర్రి? 2 @ సర్రి? - ShareChat