ShareChat
click to see wallet page
search
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்". (திருப்பாடல் 96: 1-3. 7-8) எங்கள் வாழ்வு தரும் ஊற்றே! உம் பேரின்ப ஓடையில் எங்கள் தாகம் தணிப்பவரே! எங்கள் மீட்பின் பிறப்பிடமே! இந்த காலை வேளையில், உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கிறோம். இறைவா! இன்றுவரை எங்களை உம் சிறகுகளில் அரவணைத்து, காத்துவரும் உமது மேலான அன்பிற்காக நன்றி அப்பா. இறைவா! நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில், நாங்கள் உண்மையுள்ளவர்களாக நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கத் தவறிய தருணங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். தூய தீமோத்தேயுவைப் போன்று, தூய தீத்துவைப் போன்று நாங்களும், எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையுள்ளவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க அருள் புரியும். இயேசுவே! உம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள, தன்னுடைய உயிரையே துச்சமாகக் கருதிய தூய தீமோத்தேயுவின் துணிச்சலையும், பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் கைதேர்ந்தவரான, புனித தீத்துவின் ஞானத்தினையும் எங்களுக்குத் தந்தருளும். இயேசுவே! இன்று, கத்தோலிக்க குடும்பங்களில் இறை அழைத்தல் பெருக உம்மை வேண்டுகிறோம். ஏனெனில் "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என நீர் கூறி இருக்கிறீர். "ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்" என்று கூறிய இயேசுவே! புதிய இடம், புதிய சூழல், பிரச்சனைக்குரிய இடம் ஆகியவற்றில் பணி செய்ய இருக்கும் இறைப்பணியாளர்கள் மற்றும் உமது இறைமக்களை ஆசீர்வதித்து வழிநடத்தும். தூய ஆவியானவர் அவர்களுக்கு சிறந்த ஞானத்தையும், நாவன்மையையும், மனத்துணிவினையும் தந்தருள வேண்டுகிறோம். இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். ஆசீர்வதித்து வழிநடத்தும். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற ...(1) அருள் நிறைந்த....(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat