#இரவு வணக்கம் ஒரு வழியாக தனித்துபோட்டி என அறிவித்துவிட்டார் விஜயண்ணா, அவருடன் எந்த கட்சியும் கூட்டணி வைப்பதாக தெரியவில்லை அவர் எதிர்பார்த்த காங்கிரசும் அவர் முதுகில் ஏறி திமுகவிடம் பெரிய கிளையினை பற்றி கொண்டு ஓடிவிட்டது போலிருக்கின்றது
இதனால் அவர் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டிருக்கின்றார், இதனால் பெரும் சவாலை எதிர்கொள்கின்றார்
அதாவது அணில் குஞ்சுகள் தியேட்டரில் விசிலடித்து அல்லது விஜய்க்காக யாரையாவது மிரட்டியே பழக்கபட்டவை அவைகளிடம் விசிலடிப்பினை எதிர்பார்க்கலாமே தவிர தேர்தல் பணியினை எதிர்பார்ப்பது கடினம் , காரணம் அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரியாது
தேர்தல் என்பது மாபெரும் பணத்தை கோரும் விஷயமாகிவிட்டதால் செலவினை யார் செய்வார்கள் என்பதும் கேள்வி, விஜய் தரப்பு பெரும் பணம் இறக்கினால் கண் கொத்தி பாம்பாக இருக்கும் சில அமைப்புகள் நிதிமூலம் கேட்டு பெரும் தொல்லை கொடுப்பார்கள், இது வில்லங்கமானது
இதனால் தொகுதிரீதியாக பணம் செலவழிப்பது முதல் தேர்தல் பணிகள் வரை அணில்குஞ்சுகளுக்கு சவால்கள் அதிகம் அங்கே அவை இவற்றை எதிர்கொள்வது கடினம்
அவர்களுக்கு கிடைத்திருக்கும் விசில் சின்னமும் சில நிபந்தனைக்கு உட்பட்டே கொடுக்கபட்டிருக்கின்றது, சில தொகுதிகளில் இதே விசில் சின்னத்துடன் சுயேட்சைகள் நிற்கவும் வாய்ப்பு உண்டு, அப்போது அணில்குஞ்சுகளே தடுமாற கூடும்
ஒரு பக்கம் தேர்தல் பணி, ஒரு பக்கம் பெரும் செலவு, ஒரு பக்கம் அணில்குஞ்சுகளின் உள்வீட்டு சண்டை, ஒரு பக்கம் எதிர்கட்சிகளின் வியூகம் இவற்றுகிடையில் விஜயண்ணாவின் நிலை வரும் தேர்தலில் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான்
"அமைதியா வேலைபாருங்கடா அப்ப்ரசெண்டிகளா,, சோதிக்கிறாங்களே என்னய...
அடேய் பல கோடி காண்ட்ராக்ட்டுடா.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானுகளே"
ஆம், பிரென்ட்ஸ் படத்தின் பிரபலமான காமெடி வசனம் தனக்கே வரும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார், என்ன செய்வது? சற்றும் எதிர்பாராதெல்லாம் நடப்பதுதான் வாழ்க்கை... #ரெங்கா! #renga-vamba! முகநூல் பதிவு தரவு இருந்து


