ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் விஞ்ஞான மருத்துவமும், அதன் தேவையும் எந்தளவுக்கு முக்கியம் என்பதை,இதற்கு முன்பு உருவான பல தொற்று நோய்களும், கொரோனாவும் அதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் முக்கியமானது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. 2400 படுக்கை வசதிகளைக் கொண்டது. இந்த கல்லூரியையும், மருத்துவமனையையும் கட்டுவதற்கு பெருந்தலைவர் காமராஜர் முடிவெடுக்கிறார். திருநெல்வேலியில் அதற்கு பொருத்தமான இடம் தேடுகிறார். காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் அவர்கள், தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார். அந்த நிலப்பகுதியே இன்று திருநெல்வேலியில் "ஹைகிரவுண்ட்" என அழைக்கப்படுகிறது. அங்கு தான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் இன்று இயங்குகிறது. இன்று அந்த இடத்தின் விலை ஒரு சென்ட் 15 முதல் 20 லட்ச ரூபாய். அய்யா காதர் மீரா சாஹிப் இன்றைய தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - Haji SM Kader Meera Sahib Haji SM Kader Meera Sahib - ShareChat