ShareChat
click to see wallet page
search
💫இரவு செபம் 💫 †* தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். எங்கள் குடும்பங்களையும், குடும்ப சூழ்நிலைகளையும் ஆசீர்வதிக்கும் தெய்வமே இறைவா, உம்மை நன்றியோடு போற்றி புகழ்கின்றோம் அப்பா. இன்றைய நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல் பாதுகாத்து, யாதொரு தீமையும் எங்களை அணுகாது, உமது நிறைவான அருளினால் எங்களைக் காத்த உம் பேரன்பிற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், எண்ணிலடங்கா நன்மைகளாலும், நலன்களாலும் ஆசீர்வதித்து, வழிநடத்தி வருவதற்காக நன்றி அப்பா. நாங்கள் ஒவ்வொருவரும் உம்மைப்போல பணிவு கொண்டவர்களாய், தாழ்ச்சி உள்ளவர்களாய் வாழ, எங்களுக்கு உமது அருளை பொழிவதற்காய் நன்றி செலுத்துகிறோம். எங்கள் உள்ளங்கள், இல்லங்கள் உமது அன்பினால், உமது ஆளுகையின் இரக்கத்தினால், வல்லமையாய் செயல்பட செய்கிறீரே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஒவ்வொருவரும், உமது ஆசீர்வாதத்தின் இரக்கத்தை உணரச் செய்தீரே நன்றி அப்பா. இந்த இரவை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். இந்த இரவிலே உமது அன்பு எங்களோடு இருப்பதாக. உமது அருள் எங்களோடு இருப்பதாக. உமது வல்லமை உங்களோடு இருப்பதாக. எங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் உம் இரக்கத்தினால் நிரப்புங்க அப்பா. இந்த இரவு முழுவதும் உமது அருளை நாங்கள் உணர்ந்து கொள்ளச் செய்வீராக. காவல் தூதர்கள் எங்களோடு இருப்பதை நாங்கள் அறிந்து கொள்ள செய்வீராக. ~ ஆமென். #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ஆண்டவர் வாய்ந்த வலிமை வீரரைப் போல என்னோடு இருக்கிறார் எரேமியா 20:11 ஆண்டவர் வாய்ந்த வலிமை வீரரைப் போல என்னோடு இருக்கிறார் எரேமியா 20:11 - ShareChat