உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
[அல்குர்ஆன் 15:99]
”உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வரும் முன்பாக நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்:
“என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தான தர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”
ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை”. ( அல்குர்ஆன்: 63:10,11 )
படைத்தவனுக்கு பணிந்து வாழ்வதும், படைப்புகளுக்கு (ஈந்து)
பிறருக்குக் கொடுத்து,
உதவி செய்து
வாழ்வதும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அது மரணம் வரை பேணப்பட வேண்டும் என்பதையும் மேற்கூறிய இறைவசனங்கள் உணர்த்துகின்றது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


