ShareChat
click to see wallet page
search
#பராசக்தி சாயம் வெளுத்ததால்... கவனத்தை மடை மாற்ற விஜய் ரசிகர்களை உசுப்பேற்றும் சுதா கொங்கரா ரெட்டி.. பராசக்தி படத்திற்கு எதிரான சமூக ஊடக விமர்சனங்கள், பதிவுகள், கருத்துக்கள் வெளியிட்ட Fake ID ப் பதிவுகள் ரவுடித்தனம் என்கிறார் சுதா கொங்கரா ரெட்டி.. Fake ID க்கள் ஒருபுறம் இருக்கட்டும், அதே வேளை, சொந்த ID க்களில் நூற்றுக்கணக்கானோர் கருத்துக்களை, எதிர்ப்புகளை, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனரே. தொடர்ந்து எழுதி வருகின்றனரே.. அதிலும், குறிப்பாகத் தமிழ்த் தேசியர்கள், "பராசக்தி படத்தின் கதைக்கருவாக "1965 ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப்" போராட்டத்தை எடுத்துக்கொண்டதிலேயே சுதா கொங்கரா ரெட்டிக்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது" என்கிற அடிப்படையில் 100க் கணக்கான பதிவுகள் இட்டிருக்கிறார்களே.. அவர்கள் அனைவரையும் ரவுடிகள் என்கிறாரா சுதா கொங்கரா ரெட்டி.?! "தமிழ்" மொழிக்கான போராட்டத்தை, உயிர் நீத்தவர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறேன் பேர்வழி என்று, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அடிப்படை வரலாறு, நிகழ்வு ஆகியவற்றைத் திரித்து, ஏதோ தமிழர்கள் அல்லாத பிறமொழியாளர்களே இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துத் தமிழைக் காப்பாற்றினார்கள் என்று அப்பட்டமான ஒரு பொய்யைப், புரட்டை முன்வைத்து ஒரு அபத்தமான படத்தை எடுத்ததிலேயே சுதாவின் அப்பட்டமான அரசியல் நுட்ப உள்நோக்கம் இருக்கிறது என்பதுதான் சுதாவின் மீதும் படத்தின் மீதும் வைக்கப்படும் அடிப்படைக் குற்றச்சாட்டு.. அதை மறைத்துவிட்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார் சுதா கொங்கரா.. படம் அப்படி ஆகா ஓகோ என்று வெற்றி பெற்றிருந்தால், மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்தால் இப்படி எதற்கு சுதா கொங்கரா ரெட்டி புலம்பிக்கொண்டிருக்கப் போகிறார்.?! மடை மாற்றப்போகிறார்.?! கடந்த 1937 ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 215 இடங்களில் 159 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் முதலமைச்சர் ஆகிறார். அப்போதைய சென்னை மாகாணத்தில் ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், கேரளாவில் 7 பள்ளிகளிலும், கர்நாடகாவில் 4 பள்ளிக்கூடங்களிலும் ஹிந்தி கட்டாயம் என்கிறார்.. இதை, ஆந்திராவில் இருந்த தெலுங்கர்களோ, கரநாடகவில் இருந்த கன்னடர்களோ, கேரளாவில் இருந்த மலையாளிகளோ எதிர்க்கவில்லை. மாறாக, தமிழர்கள் மட்டுமே எதிர்த்தனர். முடிவு, ஹிந்தி கட்டாயம் அல்ல என்று 1940 ம் ஆண்டு அரசு அறிவித்தது.. இதையடுத்து 1965 ம் ஆண்டு ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டபோது மாணவர் போராட்டமாக இது உருவெடுத்தது. அப்போது திமுக இதற்கான எதிர்ப்பில் பங்கேற்றது. காங்கிரஸ் அரசை எதிர்த்த இந்தப் போராட்டம்தான் துப்பாக்கி சூடு, கலவரம் என்று மாறியது. ஒரு கட்டத்திற்குப் பிறகு திமுக தலைவர் அண்ணாவுக்கும் கட்டுப்படவில்லை மாணவர்கள். அந்த அளவு உணர்வோடு போராடினார்கள்.. இந்தப் போராட்டம் 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறக் காரணமாக இருந்தது.. இத்தனை போராட்டங்களிலும், மாணவர்கள் முதன்மையாகவும், திமுகவினர் அடுத்தும் போராடினார்கள். இதில் உயிர் நீத்த அத்தனை பெரும் தமிழர்களே. போராடியவர்கள் அனைவரும் தமிழர்களே.. 1930 களில் சிறை சென்ற நடராசன், தாளமுத்து உடல் நிலை சரியில்லாமல் சிறைக்குள்ளே இறந்தது முதல் 1965 போராட்டம் நிறைவு பெரும் வரையில் உயிர் நீத்த தியாகிகளின் 💯க்கு 98 %பேர் தமிழர்களே. 1930 களில் நீதிக்கட்சி ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. கண்டுகொள்ளவே இல்லை. நீதிக்கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. உண்மையில் பெரியார் 1965 இந்திப் போராட்டத்தின்போது திமுகவுக்கு நேர் எதிராகவும், அவர்கள் மொழியில் பார்ப்பனக் காங்கிரசோடும்தான் நின்றார். அண்ணா, கருணாநிதி ஆகியோரை "கண்ணீர் துளி பசங்கள்" க.து. என்றே தமது குடி அரசு, விடுதலை இதழ்களில் குறிப்பிட்டார்.. ஆக, அவரே ஒருகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக 1965 ல் நின்றார்.. ஆனால், சுதா கொங்கராக்கள் போகிற போக்கில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் முழுக்க முழுக்கப் பிற மொழியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுத் தமிழ் அவர்களால்தான் காப்பாற்றப்பட்டது என்பதாக மிக நுட்பமாக, வஞ்சக எண்ணத்துடன் பராசக்தி படத்தை உருவாக்குக்கிறார்கள், விக்கிபீடியா, பத்திரிகை ஊடகத் தளங்களிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படியே பொய்யாகப் பதிவு செய்து வருகின்றனர் இந்தத் ஓங்கோல் திராவிட முகமூடிகள்.. ஏன்..தெலுங்கரான சுதாவுக்கு வேறு கதைக்கருவே கிடைக்கவில்லையா ? "மதராஸ் மனதே" எனும் தெலுங்கர்களின் முழக்கம் கதைக்கருவாக ஆகாதா ?, "விசால ஆந்திரா" கதைக்கருவாக ஆகாதா ? தெலுங்கு பேசும் மக்கள் வாழும் ஆந்திராவைத் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அமரஜீவி பொட்டி ஸ்ரீராமுலு, அதைத் தொடர்ந்து நடந்த இறுதி ஊர்வலம் அதில் ஏற்பட்ட கலவரம், 7 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானது, சென்னையில் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட நிகழ்வுகள் ஆகியவை கதைக் கருவாக கொங்கரா ரெட்டிக்குத் தெரியவில்லையா...? அது ஏன் "தமிழ்" மொழி மீது இவ்வளவு அக்கறை கொங்கராவுக்கு ? மேலும், அவரது ஒட்டுமொத்த பராசக்தியின் செய்தி "தமிழ் வாழ்க" என்பதும் "தமிழர்கள் ஒழிக" என்பதுமே. இது "ஓங்கோல் திராவிட முகமூடிகள்" கடந்த பல ஆண்டுகளாகக் கையாளும் உத்திதான் இது.. அதாவது, "தமிழ்" மொழி வாழ்க, அதே சமயம் தமிழர்கள் அல்ல...."ஓங்கோல் திராவிடர்கள் வெல்க" என்பதுதான் கருணாநிதி மிக நுட்பமாகத் தொடங்கி வைத்த அரசியல்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கான முக்கியத்துவத்தை சிதைத்து, தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை கொடுத்து, மொழி தமிழ், இனம் திராவிடம் என்கிற கருணாநிதியின் செயல்திட்டத்தை இன்றுவரை நடைமுறைப் படுத்துகிறார்கள் இந்தப் பிறமொழி ஓங்கோல் திராவிட முகமூடிகள். தமிழர்கள், தமிழ் இலக்கியங்களை சிதைத்து அழித்து "ஓங்கோல் திராவிடம்" என்கிற பெயரில் பிறமொழியாளர்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வது, தமிழர்களைத், தமிழுக்காக தியாகம் செய்தவர்களை முற்றும் முழுதுமாக வரலாற்றில் இருந்தே அழித்துவிடுவது என்பதுதான் இந்த "ஓங்கோல் திராவிட முகமூடிகளின்" ஒரே செயல் திட்டம்.. சுதா கொங்கரா ரெட்டி...அதை அப்பழுக்கில்லாமல் பராசக்தியில் செயல்படுத்தி இருக்கிறார்.. Fake ID க்களின் "அவதூறான" பதிவுகளைத் தாண்டித் தமிழர்களின் இத்தகைய சரியான பார்வையும், விமர்சனங்களும், கருத்துக்களும் சுதா கொங்கரா ரெட்டியை உலுக்கி இருக்கிறது.. Success Meet என்கிற அந்த கூட்டத்தில்கூட சுதா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட எவர் முகத்திலும் இயற்கையான வெற்றிக்கான மகிழ்ச்சி இல்லையே...செயற்கைப் புன்னகையுடன் துக்க வீட்டில் நின்றது போலல்லவா நின்றிருந்தார்கள்.. இதையெல்லாம் விட, 142 கோடி செலவு செய்து 50 - 60 கோடி வசூலைப் பெரிதாக பத்திரிகை ஊடகங்கள் வாயிலாக மிகைப்படுத்தியது.. இறுதியில் கோபத்தை அடக்கமுடியாமல் சுதா இப்படி Fake ID க்களை விஜய் ரசிகர்கள் என்று கூறி அவர்களை உசுப்பேற்றி ஒட்டுமொத்தப் பார்வையையும் மடைமாற்ற முயற்சிப்பது எல்லாம் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதாகவே உள்ளது.. தமிழர்கள் இனியும் ஏமாறப்போவதில்லை.. -வளர்மெய்யறிவான் #Parasakthi #SudhaKongara #sivakarthikeyan #hindiprotest #parasakthidisaster #DMKFailsTN #DMKisRSS #DmkFails #SayNoToDMK #பராசக்தி #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR )
📰தமிழ்நாடு அரசியல்📢 - புதிய Dow தலைமுறை பராசகதி NEWS UPDATE | இது ரசிகர்களின் ரவுடித்தனம் சுதா கொங்கரா ஆவேசம் ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் ஓளிந்துகொண்டு மோசமான வகையில் அவதூறு இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பரப்புகிறார்கள். ہاف எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும் அது இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல இது, வெளியிடப்படாத (பொங்கலுக்கு) நடிகரின் ரசிகர்களிடமிருந்து படம் வருகிறது இந்த ரவுடித்தனம் மற்றும் ர்த்தனத்திற்கு எதிராக நாம் குண்ட போராடுகிறோம் பராசக்தி படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா ஆதங்கம் 140.2026 ` Plhiyathalaimuralllcom புதிய Dow தலைமுறை பராசகதி NEWS UPDATE | இது ரசிகர்களின் ரவுடித்தனம் சுதா கொங்கரா ஆவேசம் ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் ஓளிந்துகொண்டு மோசமான வகையில் அவதூறு இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பரப்புகிறார்கள். ہاف எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும் அது இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல இது, வெளியிடப்படாத (பொங்கலுக்கு) நடிகரின் ரசிகர்களிடமிருந்து படம் வருகிறது இந்த ரவுடித்தனம் மற்றும் ர்த்தனத்திற்கு எதிராக நாம் குண்ட போராடுகிறோம் பராசக்தி படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா ஆதங்கம் 140.2026 ` Plhiyathalaimuralllcom - ShareChat