ShareChat
click to see wallet page
search
ராமாவத் ரவி (34) என்பவர் ஒரு அரசு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். லட்சுமிக்கும், அவரது கணவரின் சகோதரி மகனான கணேஷ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ரவி மற்றும் குடும்பத்தினர் லட்சுமியைக் பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும், லட்சுமி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளாமல் கணேஷுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த 26-ஆம் தேதி தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறுக்குப் பிறகு தனது தாய் வீட்டிற்குச் சென்ற லட்சுமி, நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பினார். அன்று இரவும் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் உறங்கச் சென்றனர். நள்ளிரவில் தனது கள்ளக்காதலன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்த லட்சுமி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரவியின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மறுநாள் காலை ரவியின் தந்தை லட்சுமண நாயக் எழுந்து பார்த்தபோது, மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொலையில் தேடப்பட்டு வந்த லட்சுமியும், அவரது கள்ளக்காதலன் கணேஷும் போலீஸில் சரணடைந்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠
வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 - MURI = "அக்கா மகனுடன் உல்லாசம்" . திருமணம் 15 ஆகி வருஷமாகுது 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் அடங்காத பெண். கணவனின் உயிரைப் பறித்த கள்ளக்காதல்  !! MURI = "அக்கா மகனுடன் உல்லாசம்" . திருமணம் 15 ஆகி வருஷமாகுது 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் அடங்காத பெண். கணவனின் உயிரைப் பறித்த கள்ளக்காதல்  !! - ShareChat