செங்கம் மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் செல்போன் டவர் பேட்டரி திருட்டு: 8 பேர் அதிரடி கைது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் தண்டராம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செல்போன் டவர் நிலையங்களில், தொடர்ச்சியாகப் பேட்டரிகள் மற்றும் ஒயர்கள் திருடப்பட்டு வருவதாகக் காவல் துறைக்கு அடுத்தடுத்துப் புகார்கள் வந்தன.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் செங்கம் மற்றும் தண்டராம்பட்டுப் பகுதிகளைச் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செங்கம் அடுத்த தீதாண்டப்பட்டு மற்றும் பாரியூர் கிராமத்தைச் சேர்ந்த:
அழகிரி (31)
விஜயகுமார் (26)
பவன்குமார் (26)
விமல் (31)
மற்றும் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த:
5. ராஜாமணி (33)
6. குமார் (26)
7. காசி (24)
8. குணசெல்வம் (27)
ஆகிய 8 பேரும் இணைந்து பல்வேறு இடங்களில் உள்ள செல்போன் டவர் நிலையங்களில் நுழைந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பேட்டரிகள் மற்றும் காப்பர் ஒயர்களைத் திருடியதை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் எட்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த திருட்டுப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
00:43

