ShareChat
click to see wallet page
search
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 13.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும் தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும் கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும் சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும் இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார் அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை . விளக்கம் =========== குருமுனிவர் சிவபெருமானைப் பார்த்துச் சொல்கிறார். நல்லதுதான் மகாதேவா ! ஆனால், மாயனாகிய மகாவிஷ்ணு, பூலோகத்தில் தவம்புரியப்போய், ஒடுக்க நித்திரையில் உறைந்து, மெய்ஞ்ஞான ஒளியாக, அதாவது, மகாவிஷ்ணுவுக்கே இயல்பான சத்திய அறிவொளியாக இருக்கிறாரே என்று குருமுனி கூறியதும், சிவபெருமான் அகமகிழ்ந்தார். . அந்த மகிழ்ச்சியோடு, கோவுகத்திலுள்ள வசிஷ்டரையும், தெய்வலோகத்திலுள்ள தேவர்களையும், வைகுண்டலோகத்திலுள்ள தர்மிகளையும், கிணநாதர், கிம்புருடர், கிங்கலியர்களையும் சக்தி, வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவையோடு அத்திமுகவனையும் ஆனவகும்பனையும் கைலையங்கிரிக்கு சிவபெருமான் வரவழைத்தார். . எல்லாரையம் கூட்டிவைத்து ஏகசங்கமாக அமைத்த சிவபெருமான், அந்த சங்கத்தாரைப் பார்த்து, மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார் என்பதை இங்கே கூடியிருப்போர் எல்லாரும் சேர்ந்து அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல செய்தியாக எனக்குத் தெரிவியுங்கள் என்றார். . . அகிலம் ========= வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார் முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால் இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும் அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும் குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன் மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை. . விளக்கம் ========== சிவபெருமானின் அந்தக் கேள்விக்கு செவிமடுத்த எல்லாத் தேவர்களும் சேர்ந்து சிவபெருமானிடம் சொல்கிறார்கள். ஈசனே ! மேகவண்ணராகிய மகாவிஷ்ணு இங்கே இல்லை. அவர் பூலோகத்தில் இறந்து கிடக்கிறார். . அதாவது, அவர் எடுத்த ஒன்பதாம் அவதாரமாகிய கிருஷ்ண அவதாரத்தை முடிப்பதற்காக அவருடைய அந்தப் பொய்யுடலை சந்தோசமாகப் பூலோகத்திலே உகுத்து வைத்து விட்டார். என்று சங்கத்தார் அனைவரும் ஒருமித்த கருத்தாக சிவபெருமானிடம் ஒப்புவித்தனர். . சங்கத்தார் அனைவரும் அவ்வண்ணமாகச் சொல்லவே, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த தேவசங்கத்தாரிடம் மீண்டும் சொல்லுகிறார். தேவர்களே, முதலில் பிறந்த குறோணியாகிய அரக்கனின் உயிரை இதுவரை ஆறு பிறவியிலும் அசுரனாகவே படைத்து விட்டோம். . அந்த ஆறு பிறவியிலும் அசுரனாகவே பிறந்த அந்த அரக்கன் எந்த பிறவியிலும் நம்மை நேசிப்பவனாகவே இல்லை. அத்துணை வீறாப்புடைய அந்தப் பாவிக்கு இப்போது நாம் கொடுக்கப்போவது ஏழாவது பிறப்பு. இந்தப்பிறவியிலும் நம்மை இவ்வரக்கன் மதிக்க மறுத்தாலோ, மறந்தாலோ இன்னுமோர் பிறவி இவனுக்கு இல்லை. ஏனென்றால் இவனுடைய முடிவு காலம் இப்பிறப்போடு நிறைவடைந்து விட்டது. . ஆகவே, இப்பிறவியை இந்த அரக்கனுக்கு நல்லதாகவே அமைக்க வேண்டும். நம்மை மதிக்க மனமும், துதிக்கப் புத்தியும் மகிழ அழகும், அதற்கேற்ற அலங்காரமும், உள்ளறிவும், மிகுந்த ஞானமும், புத்திக் கூர்மையும், உள்ளவனாகப் பிறவி செய்ய வேண்டும். . நிகழ்ந்து நிறைவேறிய ஆறு யுகங்களிலும், மகாவிஷ்ணு ஒரு தலையும், நான்கு முழம் உயரமுங்கொண்ட அவதார உருவில் தோன்றி, ஞாயநெறியுடைய நீதிமானாக நின்று தான் அந்த ஆறுயுகத்து அரக்கர்களையும் அழித்துள்ளார். ஆகவே, அந்த அரக்கர்கள் மகாவிஷ்ணுவைப் பழித்துப் பேசவே வழியில்லை. . எனவே, இனிப் பிறவி செய்யப்போகும் குறோணியின் ஆறாவது துண்டத்தை, முடிந்த யுகங்களிலெல்லாம் மகாவிஷ்ணு அவதரித்த உருவ அமைப்பிலேயே பிறவிசெய்தால், நம்மை அந்த அரக்கன் எந்த வகையிலும் பழி சொல்வதற்கு வழியில்லாமலாகிவிடும் என்று நான் கருதுகிறேன். இதுபற்றி நீங்களெல்லாம் உங்களுடைய அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் என்று தேவசங்கத்தாரிடம் சிவபெருமான் தெரிவித்தார். . . தொடரும்….. அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா வாழ்பொன்னம் மக்களே நீங்க ளெல்லாம் சென்று பதியிற் முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் ! அய்யா 13.12.2025 விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ ! 19.12.2020 DMuthu Prakash அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா வாழ்பொன்னம் மக்களே நீங்க ளெல்லாம் சென்று பதியிற் முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் ! அய்யா 13.12.2025 விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ ! 19.12.2020 DMuthu Prakash - ShareChat