ShareChat
click to see wallet page
search
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #தை பூசம் #🙏ஆன்மீகம் பூசம் ஸ்பெஷல்: ************************** முருகப்பெருமானை பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம்.. ●முருகனின் திருவுருவங்கள் 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்சபதனர், 16. சிகிவாகனர் ●முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். ●முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு விடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடி யில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற் காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது. ●முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும். ●திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின் றது. சூரனை வதம் செய்யும்போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது. ●செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலை யில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பி ரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். ●முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிர ம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங் களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வர மளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயு தம், வில் போன்றவையும் இருக்கும். ●கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்ப வர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தி யாகும். ●முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும். ●முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இத னால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையி னால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டா ன். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட தால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதா ல் கந்தன் என்றும் பெயர் கொண்டான். ●குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமா னின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது. ●கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலா ன திருப்புகழ் நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர். ●முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார். ●அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். ●முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கி ற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர். ●யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டு ள்ளது. ●முருகனின் கையில் உள்ள வேல் இறைவனி ன் ஞானசக்தி எனப் பெயர் பெறும். ●முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர். ●பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்க ளில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது. ●தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயி ல்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழு க்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம். ●முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும். ●கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும். ●தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற் கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார். ●பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளி லும் முருகன் வழிபாடு உள்ளது. ●மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது. ●முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்ப வன் என்பது பொருளாகும். ●முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும். ●வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன. ●முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலிய வை ஆகும். ●முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். ●முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர். ●பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலா லம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம். ●முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத் தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள். ●கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார். ●முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது. ●கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது. ●முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்து ள்ள நெடியமலை ஆகும். ●முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கி றார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக் கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது. ●கந்தனுக்குரிய விரதங்கள் 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம். ●முருகனின் மூலமந்திரம் ஓம் சரவண பவாய என்பதாகும். முருகா சரணம்... கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்....
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - சத்தியமாவது சரவணபவ எத்தனையோதுயரங்களை கடந்துவந்துவிட்டாய் இனிவரக்கூடிய உனக்கு பொற்காலமேநீ வாழவே நாட்கள் ஜயராகவன் கூடாதுஎனநினைத்தவர்கள்முன்பு ஜொலிக்கப்போகிறாய்சந்தோஷமாகஇரு யாமிருக்க பயமேன் விஜயராகவன் சத்தியமாவது சரவணபவ எத்தனையோதுயரங்களை கடந்துவந்துவிட்டாய் இனிவரக்கூடிய உனக்கு பொற்காலமேநீ வாழவே நாட்கள் ஜயராகவன் கூடாதுஎனநினைத்தவர்கள்முன்பு ஜொலிக்கப்போகிறாய்சந்தோஷமாகஇரு யாமிருக்க பயமேன் விஜயராகவன் - ShareChat