பார்வதி ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு சென்ற நிலையில் பிக்பாஸ் வீடு மிகவும் அமைதியாக இருந்தது. இதனை பார்த்த ஒரு தரப்பு ஆடியன்ஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி போரடிக்கிறது. இதற்கு பார்வதி உள்ளே இருந்திருக்கலாம் என்று கூறினார்கள்.
மற்றொரு தரப்பினர் இப்போது தான் பிக்பாஸ் வீடு எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்கள். பார்வதி வெளியேறியதில் வருத்தம் இல்லை என்றாலும் கம்ருதீன் வெளியேறியதில் பலருக்கும் வருத்தம் இருக்கிறது. இதனை ஆடியன்ஸ் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு தெரிவித்திருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை கானா வினோத் அல்லது திவ்யா வெல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அரோரா வெல்ல வாய்ப்பிருப்பதாக கருத்துகள் பரவி வருகின்றன. பிக்பாஸ் வீட்டில் முன்பு எலிமினேட் செய்யப்பட்டவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். முதலில் வியானா வந்து சாண்ட்ராவின் முகத்திரையை கிழித்தார்.
அதன்பின்னர், பிரவீன் காந்தி, திவாகர், பிரவீன் ராஜ், அப்சரா, ரம்யா ஜோ என ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் வந்த ஒவ்வொருவரும் சாண்ட்ராவின் வீடியோக்களை வெளியில் பார்த்துவிட்டு அவரது முகத்திரையை கிழித்து வருகின்றனர். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு தற்போது சூடுப்பிடித்துள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் டைடிலை வெல்லப் போவது யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. தற்போது கானா வினோத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதாவது, கானா வினோத் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் இதுகுறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அவரது தான் டைட்டில் வின்னர் என்று நினைத்தோம். ஆனால், இப்படி வெளியே சென்றுவிட்டாரே என்று புலம்பி வருகின்றனர்.
கானா வினோத் பாக்யா வெளியிட்டுள்ள பதிவில், எவ்வளவு லவ்ங்க கானா வினோத் மேல. பாசத்துல என்னையவே ஓவர்டேக் பண்ணிட்டீங்க. இந்த அன்ப விடவா அந்த டைட்டில் பெரிசு என்று பதிவிட்டுள்ளார். இது கானா வினோத் வெளியே வந்ததை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
#👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐 #BB9👁️: பணப்பெட்டி டாஸ்க்💰 #👁️BB9: கலகலப்பான பிக்பாஸ் வீடு😍 #👁️BB9: அதிர்ச்சியை கொடுத்த எவிக்ஷன்😮 #👁️BB9: இன்னைக்கு வெளிய போறது இவங்களா?😱


