ShareChat
click to see wallet page
search
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கல் 27-வது வார்டு மக்களுக்கு ரூ.3,000 விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொது மக்களுக்கு வழங்கினார் திண்டிவனம், ஜன. 8: கழக தலைவர், தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைப்படியும், மண்டல பொறுப்பாளர் மற்றும் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படியும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட 27-வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கழகத் தலைவர் அறிவித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 பொங்கல் சிறப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.எம். மஸ்தான் அவர்கள் பொதுமக்களுக்கு கரும்புடன் இணைந்து ரூ.3,000 பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷாபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், திமுக திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், திமுக கதிர்வேல், சித்த மருத்துவர் ஆர். சூரியபிரகாஷ், நகர துணை செயலாளர் டி.எம்.கே. தாஜ், தோல் மண்டி ஹாஜ் ஷெரீப், ஆர்.எம்.ஜி. அப்துல் ரசாக், நைனா முகமது, 27-வது வார்டு பிரதிநிதி மு. மஸ்தான், 27-வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் அசாருதீன், திமுக பி. சித்திக், மெக்கானிக்கல் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! - ShareChat