ஸ்ரீ (969) #ஆண்டாள் *திருப்பாவை* வேதம் அனைத்திற்கும் வித்து .
பறவை உருவில் வந்த பகாசுரனின் வாயைப்
பிளந்தவனும்,
பொல்லாத அரக்கனாகிய இலங்கை மன்னன் இராவணனின் தலையை கிள்ளி எறிந்தவனுமாகிய
*எம்பெருமான்* *திருமாலின்*
வீரத்தைப் பாடியவாறு சிறுமியர்கள் பாவை நோன்பு நோற்கும் இடம் சென்று சேர்ந்தனர்.
இரைதேடப் புறப்பட்ட பறவைகள் கூச்சலிடுகின்றன.
தாமரை மலர்களையும், மானையும் ஒத்த கண்களை உடையவளே!
பாவை போன்றவளே!
நீ நல்ல நாளில் மனதிற்குள்ளே கள்ள உணர்வை விட்டுவிட்டு எங்களோடு கூடி இருந்து மனம் குளிர்ந்து நீராட வருவாயாக
இவ்வாறு படுக்கையிலேயே இருந்துகொண்டு இருக்கவேண்டாம் எழுந்திரு.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஶரணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


