ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு.. 35 வயதாகிறது... இவர் பெங்களூருவில் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி.. 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
மேஸ்திரி கணவர்: பிரபு மேஸ்திரி என்பதால், வேலை காரணமாக அடிக்கடி பெங்களூரு சென்று விடுவாராம்.. இதனால் பெங்களூருவிலேயே தங்கியிருக்கும் சூழலும் வந்துள்ளது.. எனவே ராஜேஸ்வரி குழந்தைகளுடன் ஊரில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரியின் அக்கா முனியம்மாள். அவரின் கணவர் அனுமந்தன் (40). இவர் அதே பகுதியில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர். கடந்த 8 ஆண்டுகளாக 2 குடும்பங்களும் ஒரே கிராமத்தில், அருகருகே வசித்து வருகிறார்கள்.. ஒருகட்டத்தில் அனுமந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது..
கொழுந்தியாள் தகாத உறவு: இந்நிலையில் சம்பவத்தன்று தளவாய் அள்ளி கிராம பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரட்டு பகுதிக்கு தனிமையில் வருமாறு ராஜேஸ்வரியை அழைத்துள்ளார் அனுமந்தன். ராஜேஸ்வரியும் தனது டூ வீலரில் கரட்டுப் பகுதிக்கு சென்று அக்கா கணவரான அனுமந்தனை தனிமையில் சந்தித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருவரும் அமைதியாக பேசிக் கொண்டிருந்தனர்.. பிறகு திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிவிட்டது.. இதில் ஆத்திரம் தலைக்கேறிய அனுமந்தன் மச்சினிச்சியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.
ஆவேசம் அதிகமான நிலையில், அருகில் கிடந்த கல்லை எடுத்து மச்சினிச்சியின் தலையிலேயே தாக்கியுள்ளார். பிறகு கை மற்றும் கால்களில் பலமாக அந்த கல்லாலேயே தாக்கியுள்ளார். இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக நினைத்திருக்கிறார் அனுமந்தன்.
மண்ணை அள்ளி கொட்டிய காதலன்: உடனே இந்த கொலையை மறைக்க முடிவு செய்து, அருகிலிருந்த பள்ளத்தில் ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு, அங்கிருந்த பொக்லைன் மூலம் மண்ணை அள்ளி கொட்டி ராஜேஸ்வரியை புதைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. ஆனால் அதுவரை உயிருடன் இருந்த ராஜேஸ்வரி, அனுமந்தன் மண்ணை அள்ளி கொட்டியதுமே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்..
இந்த தகவல் கிடைத்ததையடுத்து, இண்டூர் போலீசார் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை தோண்டியபோது, ராஜேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த அனுமந்தனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது... கள்ளக்காதல் விவகாரத்தில் மச்சினிச்சியை உயிருடன் புதைத்துக் கொன்ற இந்த சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 ##📰ஜனவரி 12 முக்கிய தகவல்


