#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #அமாவாசை மாதம் 04ம் நாள் 18-ஜனவரி-26, ஞாயிறு தை அமாவாசை நாளில் நாம் செய்த பாவங்கள் நீங்க
வறுமை நீங்க, செல்வம் கொழிக்க, எல்லாம் வல்ல
உமாதேவியை அணைத்தெழுந்த ஈஸ்வரனை
போற்றி பாடி பணிந்திடுவோம் வாரீர்
வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப் பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன் திருவடிகளைத் தொழுது வணங்குவேன்.நீலகண்டா போற்றி
இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இம்மையில் இன்பம் அனுபவிக்கும் காலத்திலும், துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறியினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன் திருவடிகளை இறுகப்பற்றிடுவேன் தடம்புனல், இளமதி புண்ணியா போற்றி
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன்
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே
உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன் கொன்றைமலர் அணிந்தவா போற்றி
நனவினும் கனவினும் நம்பா உனை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், உன் திருவடி போற்றாமல் இரேன் முப்புரம் எரித்த சிவனே போற்றி
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், அம்மலர் அடியலால் அரற்றாது என் நா
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதில் எரிஎழ முனிந்தவனே
கைப்பொருள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன் செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல்,வேறு சிந்தை செய்யேன் நீலகண்டா போற்றி
கையது வீழினும் கழிவுறினும், செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி மையணி மிடறுடை மறையவனே..
கொடிய வினையால் துன்பம் தாக்கினாலும், உன் திருவடிகளைப் போற்றுதல் நவிலாதுமாட்டேன் தந்தையே போற்றி
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண்பொடி அணி சங்கரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும், பித்தநோயால் மயங்கிபிணிவரினும் உன்மலரடி அலால்உரையாது
என் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே, மணிமுடி இராவணனைஅடர்த்தவனே
🌹🌷🌹


