ShareChat
click to see wallet page
search
எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா". தமிழக டிஜிபிக்கு 1500 போலீசார் கடிதம். என்ன காரணம்? TN - காவல் துறையில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 881 பேர் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் போதும், இதே போல, காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் போதும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அதன்படி, சீருடை பணியாளர்கள் தினம் தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும். காவல் துறை யூனிபார்மை மிடுக்காக அணிய வேண்டும், பணியின் போது ஷு, தொப்பி, பெயர் பட்டை, தோள்பட்டை கயிறு உள்ளிட்டவற்றை முறையாக அணிந்திருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப் பணிந்து நடக்க வேண்டும். காவல் துறை பணியை சொந்த வேலைகளுக்கு அப்பாற்பட்டு திறம்பட செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் போலீசருக்கு விதிக்கப்பட்டுள்ளன. இதில், ஏதேனும் கட்டுப்பாடுகளை மீறும் போலீசாருக்கு உயர் அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் சிறிய அளவிலான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கமாகும். தவறு செய்யும் போலீசாருக்கு 3 வகையான தண்டனை அதன்படி, காவல் பணியில் இருக்கும் போலீசார் சில நேரங்களில் தவறு செய்யும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அவ்வாறு தவறு செய்யும் போலீசாருக்கு அதிக நேரம் கவாத்து செய்ய வேண்டும் எனவும், பணியில் நீண்ட நேரம் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 வகையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகம் முழுவதும் சுமார் 1,500 போலீசாருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணி பதிவேட்டில் கருப்பு குறியீடு இவ்வாறு தண்டனை பெறும் போலீசார் மீண்டும் இதே தவறை செய்தால், அவர்களது பணி பதிவேற்றி சிறிய தண்டனை என குறிப்பிடப்படும். இது அவர்களது பணியில் கருப்பு குறிப்பு போல அமைந்து விடும். இதனால், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, குடியரசு தினம், சுதந்திர தின விழாவில் முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் இருந்து பதக்கம் மற்றும் விருது பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் நிலை உள்ளது. தமிழக டிஜிபிக்கு 1, 500 போலீசார் மன்னிப்பு கடிதம் எனவே, இந்த தண்டனைகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி, தமிழக முழுவதும் சுமார் 1, 500 போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் மனு அளித்து வருகின்றனர். அதன்படி, தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) இந்த 1, 500 போலீசாரும் "தங்களை மன்னித்து விடுங்கள்" என்று மனு அளித்துள்ளனர் #Brahmin_Political_Party #police #devacmdjbe #DevaJobPortal #SaiDevGroup
Brahmin_Political_Party - RANKS OF POLICE IN INDIA DIRECTOR GENERAL OF POLICE | ADDITIONAL DIRECTOR GENERAL INSPECTOR CENERAL OF POLICE DEPUTY INSPECTOR CENERAL SUPERINTENDENT OF POLIGE ADDITIONAL SUPERINTENDENT | DEPUTY SUPERINTENDENT INSPEGTOR SUB-INSPECTOR ASSISTANT SUB-INSPECTOR HEAD CONSTABLE SENIDR CDNSTABLE POLICE OISTABLE RANKS OF POLICE IN INDIA DIRECTOR GENERAL OF POLICE | ADDITIONAL DIRECTOR GENERAL INSPECTOR CENERAL OF POLICE DEPUTY INSPECTOR CENERAL SUPERINTENDENT OF POLIGE ADDITIONAL SUPERINTENDENT | DEPUTY SUPERINTENDENT INSPEGTOR SUB-INSPECTOR ASSISTANT SUB-INSPECTOR HEAD CONSTABLE SENIDR CDNSTABLE POLICE OISTABLE - ShareChat