ShareChat
click to see wallet page
search
*தெய்வபக்தியுடன், தேசபக்தியையும் இணைத்து உருவாக்கப்பட்ட திருத்தணி படித் திருவிழா*💐 திருத்தணி படித் திருவிழா 31 டிசம்பர் : குமரக் கடவுளின் அறுபடை வீடுகளில், ஐந்தாவது படைவீடாகப் போற்றப்படுவது திருத்தணி. சூரனுடன் போரிட்டு, அவனை வதைக்காமல், சேவலாகவும், கொடியாகவும் மாற்றி அடைக்கலம் தந்து, வள்ளியின் திருக்கரம் பற்றிய தலம் திருத்தணி. மலைகளிலே சிறந்த மலை திருத்தணி என்று போற்றுகிறது கந்த புராணம். கந்தக் கடவுளின் இந்த திருக்கோயில், தேவ சிற்பி, தேவ தச்சனால் கட்டப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த மலைக் கோயிலின் மொத்தப் படிகள், வருடத்திற்கு 365 நாட்கள் என்று குறிக்கும் விதமாக 365 படிகள். பக்தர்களின் குறைகளை போக்கி மனதிற்கு அமைதி தரும் தலம் திருத்தணி. குமரனின் சினத்தை தணித்த இந்தக் கோயிலில் சூர சம்ஹாரம் நடைபெறுவதில்லை. இந்த தலத்தைப் பற்றி நிறைய புராணக் கதைகள் உள்ளன. படைப்புக் கடவுளுக்கு, பிரவணத்தின் பொருள் தெரியவில்லை என்று அவரை சிறையிலடைத்தார் பால முருகன். செருக்கு நீங்கிய பிரம்ம தேவன், தணிகையில் முருகனை வழிபட்டுத் தன் படைப்புத் தொழிலைத் தொடர்ந்தார். இங்குள்ள பிரம்ம தீர்த்தம், நான்முகனால் உருவாக்கப்பட்டது. சூரபத்மனின் சகோதரன் தாரகாசுரனிடம், தன்னுடைய சக்கராயுதத்தை இழந்தார் திருமால். அவர் தணிகை வேலனை வழிபட்டு சக்கராயுதத்தை மீண்டும் பெற்றார். கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், சிறந்த முருக பக்தர். அவர் தன்னுடைய குருநாதர் சிதம்பரநாத யோகியின் கட்டளைப்படி, திருத்தணி சென்று ஒரு மண்டலம் தங்கி இறைவனை ஆராதனை செய்தார். அப்போது, வயோதிகர் வேடத்தில் தோன்றி, அவரை முருகப் பெருமான் ஆட்கொண்டதாகக் கூறுவர். தீட்சிதர் திருத்தணி முருகப் பெருமானைக் குறித்துப் பாடிய கிருதிகள் 'குருகுஹ கிருதிகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோயிலில் வருடந்தோறும் நடக்கும் முக்கியத் திருவிழா வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி நடக்கும் படித் திருவிழா. அந்த நாளில், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை, படிக்கு ஒரு பாடலாகப் பாடியபடி, ஒவ்வொரு படிக்கும் சந்தனம், குங்குமம் இட்டு, சூடமேற்றி பக்தர்கள் தணிகை மலையானை தரிசிக்கச் செல்வார்கள். இந்தப் படிவிழாவைத் துவக்கிய பெருமை வள்ளிமலை சுவாமிகள் அவரைச் சாரும். 1916ஆம் வருடம் டிசம்பர் 31ஆம் தேதி, வருடத்தின் கடைசி நாள், ஞாயிற்றுக் கிழமையான அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக் காணவில்லை. காரணத்தைக் கேட்ட சுவாமிகள் அதிர்ச்சி அடைந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான அந்த தருணத்தில் மக்கள், பழங்கள், மாலைகள் ஆகியவற்றுடன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆங்கில துரைமார்களை சந்திக்கச் சென்றிருப்பதாக அறிந்தார். நமக்கு எல்லாம் துரை என்று முருகப் பெருமான் இருக்கும் போது, ஆங்கில துரையைப் பார்க்கச் செல்வதை மாற்ற முடிவெடுத்தார். 31-12-1917 வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித் திருவிழாவைத் துவக்கி வைத்தார். இந்த படித் திருவிழா தெய்வபக்தியுடன், தேசபக்தியையும் இணைத்து உருவாக்கப்பட்டது. பின்னர், காஞ்சிப் பெரியவரால், 'திருப்புகழ் மணி' என்று பட்டம் சூட்டப் பெற்ற டி.எம்.கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌன குரு சுவாமிகள் ஆகியவர்களால் படித்திருவிழா பிரபலமடைந்தது. இதற்குப் பின்னால், 1921ஆம் ஆண்டு, தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, சச்சிதானந்த மகான் ஆசியுடன் திருத்தணித் திருப்புகழ்த் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். திருப்புகழ் முத்துசுவாமி ஐயர், மற்றும் அவர் மகன் திருப்புகழ் டாக்டர் மணி ஐயர் ஆகியோர், அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம் என்ற அமைப்பின் மூலம் திருத்தணி படித் திருவிழாவை ஏற்பாடு செய்தனர். நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் சொல்லின் செல்வர்! தொடர்ந்து நடந்து வரும் இந்த படித் திருவிழாவில், தமிழ்நாட்டில் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல திருப்புகழ் சபைகள் பங்கேற்கின்றன. குமரக் கடவுளின் புகழ் பாடும் திருப்புகழைப் பாடிய படி, தணிகை மலையேறி இறைவனை தரிசிப்பது, மனதிற்கு அமைதி தரும் சுகனுபவம்.💐 ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏ஆன்மீகம்
#SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes - ShareChat