ஸ்ரீ (969) #ஆண்டாள் திருப்பாவை வேதமனைத்திற்கும் வித்து.
பசுக்களுடன் கன்றுகளும் சேர்ந்திருக்க அப்பசுக்களின் பாலைக் கறந்து ,
பகைவர்களுடைய ஆற்றலை அழிக்கும் படி ,
இவர்களே சென்று போரிடும் ஒருவகைக் குற்றமும் இல்லாத இடையர்களின் அழகிய கொடி போன்றவளே !
பாம்புப் படம் போன்ற அல்குலைக் கொண்டு,
மயில் போன்ற சாயல் உடையவளே!
*கண்ணபிரானின்* ஆசை பெண்ணே! எழுந்து வருக!
உன் முன் வாசலிலே உறவு முறை கொண்ட தோழிகள் அனைவரும் கூடி,
மேக நிறக் *கண்ணனின்* திருநாமங்களை பாடிட,
நீயும் அதனைக் கேட்டும் அசையாமலும் மறுமொழி கூறாமலும் உறங்கிக் கொண்டிருப்பது எதற்காக ?
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஶரணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


