இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, உயிரிழந்தவரின் காதுக்கு அருகே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கணவரைக் கொன்றுவிட்டு, அவரது சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் அந்தப் பெண் தனது மொபைலில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார். கொலையாளி பெண்ணின் இந்த வக்கிரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠


