ShareChat
click to see wallet page
search
பாக்யராஜ்: சினிமாவை தனது திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்த பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனுவும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இதே போன்று மகள் சரண்யா, பாக்யராஜ் இயக்கி தயாரித்த 'பாரிஜாதம்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச்சாகவில்லை. இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். சரண்யா பாக்யராஜ்: அந்த படத்திற்கு பிறகு சரண்யா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை, வெளியில் தலைகாட்டவும் இல்லை. அவர் காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அப்போது பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. இந்த தகவலை, பாக்யராஜ் தரப்பில் இருந்தோ, சரண்யா தரப்பில் இருந்தோ எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாமல் இருந்தார் சரண்யா. பல ஆண்டுக்கு பிறகு: அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பதாக கூறினார். ஆனால் சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? அவருடைய கணவர் யார் என்பதை அவர் கூறவில்லை. தற்போது சரண்யா வீட்டில் இருந்த படியே காஸ்ட்யூம் டிசைனர் வேலையை பார்த்து வருகிறார். பல ஆண்டுகளாக வெளிஉலகத்திற்கு தலைகாட்டாமல் இருந்த இவர்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். தற்போது சரண்யா தனது இன்ஸ்டாகிராமில், கையில் பூவுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீயோவை பார்த்த அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். #தகவல் களஞ்சியம் (TSK) #சினிமா🎤தகவல் #பாக்கியராஜ் ஸ்டேட்டஸ்
தகவல் களஞ்சியம் (TSK) - 18 வருஷமா முகத்தை காட்டாதா பாக்யராஜ் மகள். கவலைகளில் இருந்து மீண்டு வந்த சரண்யா! 18 வருஷமா முகத்தை காட்டாதா பாக்யராஜ் மகள். கவலைகளில் இருந்து மீண்டு வந்த சரண்யா! - ShareChat