உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அம்ரோஹாவைச் சேர்ந்த, 16 வயது மாணவி ஒருவர், தீவிர துரித உணவுப் பழக்கத்தால் ஏற்பட்ட கடுமையான குடல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கைகளின்படி, அந்தச் சிறுமி வீட்டில் சமைத்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, பீட்சா மற்றும் பர்கர்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். அதன் காரணமாக அவரது குடலில் ஒரு கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பரவலான தொற்று மற்றும் பல உறுப்புகள் செயலிழப்புக்கு வழிவகுத்தது என்பதை அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து ஏற்படும் கொடிய உயிரிழப்புகளுக்கு தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகும் போது, அதை தவிர்க்க வேண்டியது அவசியமென்பதை உணர வேண்டிய காலம் இது.
#🤔தெரிந்து கொள்வோம்


